COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 29, 2012

12

களம்

அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.132 சட்டக்கூலியை உடனே வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும், பஞ்சமி, பூதான் நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர் பாதுகாப்புக்குத் தனிச்சட்டம் வேண்டும், கூடன்குளம் அணுஉலை மூடப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நவம்பர் 19 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாக்குரிமை, ரேஷன் அட்டை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு அவிதொச தலைவர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் தலைமை தாங்கினர். அவிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், சிபிஅய் (எம்.எல்) மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் .எஸ்.குமார் சிறப்புரையாற்றினர். மாலெ கட்சி மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் ராஜா, வாசு, பாலாஜி, சரஸ்வதி, புரட்சிகர இளைஞர் கழகத்தினுடைய தோழர் அன்பு, அகில இந்திய மாணவர் கழக தோழர் சீதா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினுடைய தோழர் சாந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் தரப்பட்டது. ரூ.132 கூலி, வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது பற்றி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து உடனே நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை மேற்பார்வையிட்டு தொழிலாளர்களிடம் குறைகளையும் பிரச்சனைகளையும், கேட்டுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

23.11.2012 அன்று புதுக்கோட்டையில் கந்தர்வக்கோட்டை, குன்றான்டார் கோவில், கரம்பக்குடி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மாலெ கட்சி மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் வளத்தான், அவிதொச நிர்வாகிகளில் ஒருவரான தோழர் ராஜாங்கம், மாவட்டத் தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள். தஞ்சையில் திருவிடைமருதூர் ஒன்றியம் வேப்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவிதொச மாநில தலைவர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்தனன், கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் ரமேஷ்வர்பிரசாத், தோழர் கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் புலவேந்திரன் தலைமை தாங்கி நடத்தினர். அகில இந்திய மாணவர் கழக தலைவர்களில் ஒருவரான தோழர் ராஜசங்கர், அவிதொச தோழர் தெய்வசிகாமணி ஆகியோர் உரையாற்றினர்.

விழுப்புரத்தில் 5 மய்யங்களில் விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் கட்டமைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் செண்பகவள்ளி தலைமை தாங்கினார். கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் தேன்மொழி, தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினர். திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் லோகநாதன் தலைமை தாங்கினார். தோழர் செண்பகவள்ளி கண்டன உரையாற்றினார். திருநாவலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். செஞ்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சுசீலா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தோழர் தட்சிணாமூர்த்தி கண்டன உரையாற்றினார்.

Search