களம்
நாயக்கன்கொட்டாய்
தலித் மக்களுக்கு
நீதி வேண்டும்
தர்மபுரி தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் தங்கள் வாழ்வை இழந்துவிட்ட தலித் மக்களுக்கு நியாயம் கோரியும் சென்னையில் நவம்பர் 19 அன்று ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகிய அமைப்புக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள், இளைஞர், மாணவர், பெண்கள் அமைப்புகளின் தோழர்கள் கணிசமான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினரும், இளைஞர் அமைப்பின் மாநில அமைப்பாளருமான தோழர் பாரதி தலைமை தாங்கினார். கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் ஜானகிராமன், இரணியப்பன் கண்டன உரையாற்றினார்கள். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, உண்மை அறியும் குழு தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் நேரடியாக சந்தித்த அனுபவத்தை விளக்கியும், ஆட்சியாளர்களை கண்டித்தும் உரையாற்றினார். வழக்கறிஞர்கள் திரு.அய்யந்துரை, திரு.அப்துல் சதார், அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் அன்பு, சீதா, உமா, புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் சுரேஷ், சதீஷ், ஜான்பால், உழைப்போர் உரிமை இயக்க மாவட்ட நிர்வாகிகள் தோழர் மோகன், பசுபதி, கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் தோழர்கள் முனுசாமி, குப்பாபாய், பெண்கள் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் லில்லி, தனலட்சுமி ஆகியோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.
19.11.2012 அன்று பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் புகழேந்தி, சுப்பிரமணி, வெங்கடேசன் உரையாற்றினர்.
20.11.2012 அன்று கோவையில் பெரியநாய்க்கன்பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான வெங்கடாசலம், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி, பிரிக்கால் சங்க தலைவர்கள், எல்எம்டபிள்யு தோழர் சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
20.11.2012 அன்று மயிலாடுதுறையில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தோழர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தோழர்கள் ரமேஷ்வர்பிரசாத், வீரசெல்வன், கலையரசன், ஆனந்த் மற்றும் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.
26.11.2012 அன்று சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மாவட்டத் தோழர்கள் தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் இணைந்து நடத்தினர். கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க தலைவர் தோழர் சிம்சன், ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் சந்திரமோகன், மாநிலச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.