களம்
மன்மோகன் அரசின்
மக்கள் விரோத சீர்திருத்த
நடவடிக்கைகளுக்கு
எதிராக
அக்டோபர் 12 அன்று சமையல் எரிவாயு, டீசல் விலை உயர்வை கண்டித்தும், காப்பீட்டுத் துறையில் 49% அந்நியர் நுழைவை கண்டித்தும், தொழிலாளர்களுடைய ஓய்வூதிய தொகையை 49% தனியாருக்கு வர்த்தக சூதாட்டத்திற்கு திறந்து விடுவதை கண்டித்தும் அகில இந்திய எதிர்ப்பு நாள் கண்டனக் கூட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் முனுசாமி தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் பழனிவேல், அகில இந்திய மாணவர் கழக தேசிய துணைத் தலைவர் தோழர் பாரதி, உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் மோகன், வேணுகோபால், பசுபதி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட பொருளாளர் தோழர் லில்லி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சங்க முன்னணி தோழர் சுரேந்தர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.