இளைஞர்
கழகம்
புரட்சிகர இளைஞர்
கழகத்தின் தேசிய
மாநாட்டு தயாரிப்பு
கூட்டம்
திருவள்ளூர்
மாவட்டம் ஊத்துக்கோட்டையில்
புரட்சிகர இளைஞர்
கழகத்தின் 5ஆவது
தேசிய மாநாட்டு
தயாரிப்புக் கூட்டம்
அக்டோபர் 14 அன்று
நடைபெற்றது. இக்கூட்டத்தில்
புரட்சிகர இளைஞர்
கழகத்தின் தேசிய
மாநாடு குறித்தும்,
பிப்ரவரி 20, 21 அகில
இந்திய வேலை நிறுத்த
போராட்டத்தில்
மாணவர், இளைஞர்களை
ஈடுபடுத்த வேண்டும்
எனவும், மார்ச்
23ல் நடைபெறவுள்ள
சட்டமன்ற முற்றுகை
போராட்டத்தை வெற்றி
பெறச் செய்வது
எனவும் முடிவு
எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்கு
புரட்சிகர இளைஞர்
கழக மாவட்ட அமைப்பாளர்
தோழர் அன்பு தலைமை
தாங்கினார். புரட்சிகர
இளைஞர் கழக மாநிலக்குழு
உறுப்பினர் ராஜேஷ்,
காஞ்சிபுரம் புரட்சிகர
இளைஞர் கழக மாவட்ட
அமைப்பாளர் தோழர்
சந்த்ரு, அகில
இந்திய மாணவர்
கழக மாநில குழு
உறுப்பினர் தோழர்
சீதா ஆகியோர் உரையாற்றினர்.
புரட்சிகர இளைஞர்
கழக மாநில அமைப்பாளர்
தோழர் பாரதி சிறப்புரையாற்றினார்.
50க்கும் மேற்பட்ட
தோழர்கள் கலந்து
கொண்டனர்.
-அன்பு