களம்
கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூடு!
அக்டோபர் 29 சட்டமன்ற முற்றுகை போர்
மாலெ கட்சி மாநிலக் கமிட்டியின் முடிவின் அடிப்படையில் திட்டமிட்ட வகையில் இக்கிளர்ச்சியில் கட்சி ஊக்கமாக பங்குபெற்றது. விழுப்புரம், நெல்லை, நாகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக கட்சியின் பங்கேற்பு பற்றி செய்தி கொண்டுவரப்பட்டது. அக்டோபர் 17 அன்று கட்சி மாநில அலுவலகத்தில் தோழர்கள் குமாரசாமி, பாலசுந்தரம், ஜானகிராமன், சேகர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் கட்சியின் பங்கேற்பு தயாரிப்பு குறித்து திட்டமிடப்பட்டது. அக்டோபர் 28 அன்று தோழர்கள் குமரேஷ், எ.எஸ்.குமார், ராதாகிருஷ்ணன், சேகர், பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் கடைசி நேர தயாரிப்பு குறித்து பேசப்பட்டது. போலீஸ் கெடுபிடியை மீறி கலந்து கொள்வது பற்றி திட்டமிடப்பட்டது.
…….
மேலும்
படிக்க இங்கு
CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
களம்
மின்வெட்டு...
டெங்கு... தமிழக
அரசே பதில் சொல்!
புதுக்கோட்டையில் நகரத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம், ஓட்டு போட்ட மக்களுக்கு பல மணி நேர மின்வெட்டா என்ற கேள்வியுடன் மின்வெட்டைக் கண்டித்தும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என முழக்கம் எழுப்பியும் அக்டோபர் 27 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் பழ.ஆசைத்தம்பி, தோழர் வளத்தான், மாலெ கட்சி, அவிதொச, புரட்சிகர இளைஞர் கழக முன்னணியினர் பங்கேற்றனர்.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
தலையங்கம்
மண்டிக்
கிடக்கும் மக்கள்
பிரச்சனைகளுக்கு
இந்திய தொழில் கூட்டமைப்பின் உதவியுடன் தொலை நோக்குத் திட்டம் 2023 அறிவித்த பிறகு அதை அமலாக்கும் போக்கைத் துவக்கியுள்ளார் ஜெயலலிதா. ஒரே நாளில் ரூ.20,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களுடன் கையொப்பமிடப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அந்நிய முதலீட்டை கொண்டாடிய கூட்டத்தில், அந்நிய முதலீட்டை ஆபத்தானது, ஆபத்தில்லாதது என்று இரண்டாக தரம் பிரித்து ஜெயலலிதா விளக்கினார்.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
பேரணி
சிபிஅய்
எம்எல் பேரணி அய்க்கிய
ஜனதா தள தலைவர்களை
பேச்சு மூச்சில்லாமல்
குழம்ப வைத்துவிட்டது
நவம்பர்
9 அன்று
பாட்னாவில்
மாலெ
கட்சி
நடத்திய
மாற்றத்துக்கான
பேரணி
பற்றி
நவம்பர் 10 அன்று
பாட்னா,
பீகார்
டைம்ஸ்
இதழில்
வெளியான
செய்தி
நவம்பர் 9 அன்று இகக(மாலெ) நடத்திய மாற்றத்திற்கான பேரணியில் பேசியவர்கள், நிதிஷ்குமார் அரசாங்கம் ஊழலில் ஊறி திளைத்திருக்கிறது என்றும் அது முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது என்றும் விமர்சித்தனர். மத்திய அய்முகூ அரசாங்கம் முதலாளித்துவ அமெரிக்காவின் பாட்டிற்கேற்ப ஆடுவதாகச் சாடினர். இந்த உரைகள் முக்கியமானவைதான்.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
சிறப்புக்
கட்டுரை
ஜனநாயகம்
வென்றதா, பணநாயகம்
வென்றதா?
எஸ்.குமாரசாமி
அமெரிக்காவில் இன்னமும் இப்போதும் இடதுசாரி அறிஞர்கள் மார்க்சிய சிந்தனையாளர்கள் இருக்கின்றனர். அவர்களது வாதப்படி, “அமெரிக்காவில் ஜனநாயகம் (டெமாக்ரசி) இல்லை; பணநாயகம் (டாலரோக்ரசி)தான் இருக்கிறது. அவர்கள், திட்டவட்டமாக, நிதி மூலதனம் எதை விரும்புகிறதோ, அதைத்தான், அதை மட்டும்தான், ஒபாமாவோ ராம்னியோ செய்ய முடியும்” என்கிறார்கள்.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
நாட்டு நடப்பு
அனைத்து
ஆளும் வர்க்கக்
கட்சிகளும் ஊழல்
பிடித்த தொழில்-அரசியல்
கூட்டின் வலைக்குள்
பாஜக தலைவர் நிதின் கட்கரி, சந்தேகத்துக்குரிய தொழில்களின் இருண்ட வலையின் தலைவர் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளார். கட்கரியின் சர்க்கரை மற்றும் மின் உற்பத்தி ஆலைகளின் முதலீட்டாளர்கள் என 18 நிறுவனங்கள் போலி முகவரிகள் கொண்டுள்ளன. அல்லது முகவரிகளே இல்லாமல் இருக்கின்றன. இந்த நிறுவனங்களில் பல, கட்கரியின் வாகன ஓட்டுனர், ஆருடக்காரர் ஆகியோரின் பெயர்களில் உள்ளன. முக்கிய எதிர்க்கட்சியின் தேசியத் தலைவர், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் போலி நிறுவனங்களின் ராஜ்ஜியத்தின் தலைவராகவும் உள்ளார்.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
கேள்வி
மனிதக்
கழிவகற்றும் பணியில்
அந்நிய நேரடி முதலீடு
வேண்டும்!
ஒரு கோரிக்கையை வலியுறுத்த, தங்கள் துன்பங்களை சமூகத்தின், அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர, மக்களின் ஆதரவை திரட்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது ஜனநாயக நடைமுறை. அய்முகூ அரசாங்கம், அதற்கு தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி, அந்த ஜனநாயக நடைமுறைக்கு புதிய பரிமாணம் சேர்க்கப் பார்க்கிறது. நாட்டு மக்களை மொத்தமாக அந்நிய நிறுவனங்களிடம் அடகு வைக்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை செயல்படுத்த மக்களிடம் ஆதரவு கேட்டு பேரணி நடத்துகிறது. உங்கள் வீட்டுக்கு கொள்ளி வைக்கப் போகிறேன், கொஞ்சம் தீ கொடுங்கள் என்று மக்களிடம் கேட்கிறார்கள் அய்முகூ ஆட்சியாளர்கள்.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
அறிக்கை
தருமபுரியில்
சாதி வெறியின்
கோர தாண்டவம்
சந்திரமோகன்
நத்தம் காலனியில் காவல் துறை கூட நுழைவதற்கு அஞ்சிய ஒரு காலமும் இருந்தது. 30 ஆண்டுகால நக்சலைட் இயக்கம் வலுவாக இருந்தபோது, தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் உள்ள நாயக்கன் கொட்டாய் எனப்படுகிற வட்டாரத்தில் தலித் மற்றும் வன்னியர் உழைக்கும் மக்கள் மத்தியில் கம்யூனிச இயக்கம் செல்வாக்கு பெற்றிருந்தது. சாதிவெறி தலை தூக்கியதில்லை. தருமபுரி நக்சலைட் இயக்கம் தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்தது. அதற்கு இன்றும் சாட்சியாக அப்பு, பாலன் சிலைகள் காட்சியளிக்கின்றன.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
கடிதம்
அய்யா ப.சி அவர்களுக்கு, வணக்கங்க. நலமாத்தான் இருப்பீங்க. உங்க கட்சிக்காரங்க ப.சிதம்பரம்ங்கிற உங்க பெயரை சுருக்கி, பசியறியா உங்களப் போய் ப.சின்னு கூப்பிடுதாங்களேன்னு நினைப்பேன். அப்புறம் கருப்பா இருக்கிறவங்களுக்கு வெள்ளைத்துரைன்னு ஆசையா பெயர் வப்பாங்கள்ள, அது மாதிரி இருக்கும்னு நினைச்சுக்குவேன்.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
மண்ணில்
பாதி
ஜனநாயக
விரோத ஆயுதப்படை
சிறப்பு அதிகார
சட்டத்தை ரத்து
செய்!
இரோம்
சர்மிளாவின்
12 ஆண்டுகால பட்டினிப்
போராட்டம்!
கே.ஜி.தேசிகன்
மணிப்பூரில் 1947 - 1949ல் குறுகிய காலத்திற்கு மன்னர் தலைமையிலான அரசியலமைப்பு ஆட்சி (constitutional monarchy) செய்தது. இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டு பின் 1956ல் யூனியன் பிரதேசமானது. 1972ல்தான் மணிப்பூர் தனி மாநில அந்தஸ்து பெற்றது.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
களம்
ஒப்பந்தத்
தொழிலாளர் உரிமை
காப்போம்!
ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் நாடு முழுவதும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் படுமோசமான சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதற்கு எதிராக, நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாளில் ஏஅய்சிசிடியு நாடு முழுவதும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் கட்டமைத்தது.
…….
மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
களம்
அனைத்திந்திய
விவசாயத் தொழிலாளர்
சங்க கிளை துவக்க
விழா
தேசிய
ஊரக வேலை உறுதித்
திட்டத்தில்
ஆண்டு
முழுவதும்
வேலை,
குடும்பத்தில்
இருவருக்கு வேலை, சட்டக்
கூலி
ரூ.132, நிலமற்ற
அனைவருக்கும்
நிலம்,
வீட்டுமனை,
விவசாய
தொழிலாளர் அனைவரையும்
வறுமைக்
கோட்டுக்குக்
கீழ்
உள்ளோர்
என அறிவிப்பது
ஆகிய கோரிக்கைகளை
வலியுறுத்தி
அனைத்திந்திய
விவசாயத்
தொழிலாளர்
சங்கம்
நவம்பர்
23 அன்று
ஒன்றிய மட்டங்களில்
நடத்தவுள்ள
நிகழ்ச்சிகள்
தயாரிப்பின்
ஊடே, விழுப்புரம்
மாவட்டத்தில்
கூட்டடியில்
அனைத்திந்திய
விவசாயத்
தொழிலாளர்
சங்க
கிளை
துவக்க
விழா
நவம்பர்
7 அன்று
நடத்தப்பட்டது.
மாலெ
கட்சி
மாவட்டச்
செயலாளர்
தோழர்
எம்.வெங்கடேசன்,
அவிதொச
மாவட்ட
அமைப்பாளர்
டி.கலியமூர்த்தி
ஆகியோர்
கூட்டத்தில்
கலந்துகொண்டு
…….
மேலும்
படிக்க இங்கு
CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
களம்
கூடங்குளம்
அணு உலையை உடனடியாக
மூடு!
போராடும்
மக்கள் மீது ஒடுக்குமுறை
ஏவாதே!
அக்டோபர் 29 சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்தவிடாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தயாரானவர்களை கைது செய்த அஇஅதிமுக அரசின் ஒடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து அக்டோபர் 30 அன்று மாநிலம் முழுவதும் மாலெ கட்சி கண்டன நிகழ்ச்சிகள் நடத்தியது. கூடங்குளம் அணுஉலை மூட சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும், தேர்தலில் சொன்ன வாக்குறுதியை ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும், மக்கள் பாதுகாப்பை அச்சத்தை கணக்கில் எடுக்காமல் காவல்துறையை கொண்டு இடிந்தகரையில், சென்னையில் நடக்கும் போராட்டத்தையும் ஒடுக்க காவல்துறையை பல்லாயிரக்கணக்கானவர்களை குவித்து போராட்டக்காரர்களை கைது செய்ததை கண்டித்தும், 30.10.2012 அன்று மாநிலம் தழுவிய அளவில் கட்சி கண்டன நாள் அனுசரித்தது. சென்னையில் அம்பத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர்கள் பாரதி, மலர்விழி, மாவட்டக் கமிட்டி தோழர்கள் மோகன், முனுசாமி, புகழ்வேந்தன், பசுபதி, வேணுகோபால் ஆகியோர் கண்டன முழக்கம் இட்டனர்.
…….
மேலும்
படிக்க இங்கு
CLICK செய்யவும்
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞