களம்
எம்ஆர்எப்
தொழிலாளர் கருத்தரங்கம்
நவம்பர் 17 அன்று திருவெற்றியூரில் தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் 2013 ஊதிய உயர்வு ஒப்பந்தம் - தொழிலாளர்களின் கடமைகளும் போராட்டங்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி கலந்துகொண்டு கருத்துரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர்கள் தோழர்கள் ஜவஹர், ராதாகிருஷ்ணன், எ.எஸ்.குமார், புவனேஸ்வரி, பழனிவேல், சேகர் கலந்து கொண்டனர். சீரமைப்பு இயக்கத்தின் முன்னணி நிர்வாகிகள் தோழர்கள் சிவபிரகாசம், சேகர், கார்பரண்டம் சங்க பொதுச் செயலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். எம்ஆர்எப், கார்பரண்டம், ராயல் என்பீல்ட், லேலண்ட், ஆலைகளின் முன்னோடிகள் கலந்து கொண்டனர். எம்ஆர்எப் ஆலையின் முன்னணி தோழர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 2013 பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் திருவெற்றியூர் பகுதியில் தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், எம்ஆர்எப் தொழிலாளர்கள் முன்னணியில் நின்று அமல்படுத்துவது தொழிலாளர்களின் முக்கிய கடமையாக இருக்கும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.