களம்
முற்போக்கு
பெண்கள் கழக மாநாடு
நாமக்கல் மாவட்ட அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் இரண்டாவது மாநாடு கெப்டம்பர் 30 அன்று குமாரபாளையத்தில் நடத்தப்பட்டது.
தோழர்கள் ஜெயலட்சுமி, கலைச்செல்வி, ஈஸ்வரி ஆகியோர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை வழிநடத்தியது. வர்க்க விடுதலையும் பெண் விடுதலையும் சந்திக்கும் புள்ளி என்ற தலைப்பில் மாநாட்டில் விவாதம் கட்டமைக்கப்பட்டது. தீப்பொறி இதழில் வெளியான தாய்மை வர்த்தகம் கட்டுரையை மாவட்டச் செயலாளர் தோழர் ஜாக்குலின் மேரி வாசித்து விளக்கினார்.
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் பொன்.கதிரவன் ஆகியோர் மாநாட்டில் வாழ்த்துரையாற்றினர்.
மாநாடு 7 பேர் கொண்ட மாவட்டக் குழுவை தேர்ந்தெடுத்தது. தோழர் ஜெயா மாவட்டத் தலைவராகவும் தோழர் ஜாக்குலின் மேரி மாவட்டச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாடு
பின்வரும்
தீர்மானங்களை
நிறைவேற்றியது.
ü
விலைஉயர்வைக்
கட்டுப்படுத்த
மத்திய
மாநில
அரசுகள்
உடனடியாக
நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
ü
சமையல்
எரிவாயு
தட்டுப்பாட்டுக்கு
முடிவு
கட்டப்பட
வேண்டும்.
வருடத்தில்
12 எரிவாயு
உருளைகள்
வழங்கப்பட
வேண்டும்.
ü
பெண்கள்
மீது
அதிகரித்து
வரும்
வன்முறைச்
சம்பவங்களை
தடுக்க
மத்திய
மாநில
அரசுகள் உடனடியாக
நடவடிக்கை
எடுக்க
வேண்டும்.
ü
சில்லறை
வர்த்தகத்தில்
அந்நிய
நேரடி
முதலீட்டை
அனுமதிக்கும்
முடிவு
திரும்பப்
பெறப்பட வேண்டும்.
ü
கூடன்குளம்
அணுஉலை
உடனடியாக
மூடப்பட
வேண்டும்.
போராட்டக்காரர்கள்
மீது போடப்பட்டுள்ள
பொய்
வழக்குகள்
ரத்து
செய்யப்பட
வேண்டும்.
ü
சுமங்கலித்
திட்டத்துக்கு
முடிவு
கட்டப்பட
வேண்டும்.
ü
மாணவி
பாலியல்
வன்முறைக்கு
உள்ளாக்கப்பட்டு
படுகொலை
செய்யப்படுவதற்கு
காரணமான விவேகானந்தா
கல்லூரி
நிர்வாகத்தின்
மீது
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.
ü
டாஸ்மாக்
கடைகளை
அரசு
உடனடியாக
இழுத்து
மூட வேண்டும்.
அங்கு
வேலை செய்பவர்களுக்கு
மாற்று
வேலைவாய்ப்பு
வழங்க
வேண்டும்.
ü கடுமையான மின்வெட்டால் வேலை இழக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000, 50 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெண்ணெய் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும்.