COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, November 3, 2012

மாலெ தீப்பொறி நவம்பர் 2012, 01-15 தொகுதி 11 இதழ் 7

களம்

குமரி மாவட்ட மாலெ கட்சி தலைவர்கள் மீது

அவதூறு பரப்பி சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) குமரி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து மீதும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் மேரி ஸ்டெல்லா, மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சுசீலா ஆகியோர் மீதும் அவதூறு பரப்பி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குளச்சலில் அண்ணா சிலை அருகில் 14.10.2012 மாலை 4 மணி முதல் 7 மணி வரை பெருந்திரள் தர்ணா நடைபெற்றது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

தலையங்கம்

இடது, ஜனநாயக நிகழ்ச்சிநிரலுக்காகப் பாடுபடுவோம்!

கச்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்திட உச்சநீதிமன்றத்தை அணுகுவது என்று முடிவு செய்த அதிமுக அரசாங்கம், சேதுசமுத்திர திட்டம் தேவையற்றதென உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பதென்றும் முடிவு செய்துள்ளது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

இரங்கல்

தோழர் முருகையனுக்கு செவ்வஞ்சலி

ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், இகக (மாலெ) புதுக்கோட்டை மாவட்டக் குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் முருகையன் (வயது 57) 15.10.2012 அன்று திடீர் மாரடைப்பால் காலமானார்.

அக்டோபர் 13, 14 தேதிகளில் நடைபெற்ற மாலெ கட்சி மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் 14.10.2012 அன்று இரவு தஞ்சை ரயில் நிலையம் சென்று டெல்லியில் நடைபெறவுள்ள கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பு மாநாட்டுக்கு செல்ல ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து வந்தார். மறுநாள் காலை மாரடைப்பால் காலமானார்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

அமைப்பு

மாதம் இருமுறை கூடும் சேலம் மணியனூர் கட்சி கிளை

கட்சி வலுப்படுத்தும் இயக்கத்தை ஒட்டி கட்சி கிளைகளை செயலூக்கப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக சேலத்தில் மணியனூர் கிளை முறையாக கூடுவது, வேலைகளை திட்டமிடுவது என சுதந்திரமான செயல்பாடு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகரம் 50வது டிவிசனில் மணியனூர் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுமானத் தொழிற் சங்க வேலைகள் துவங்கப்பட்ட பின்னணியில் மணியனூர் மாலெ கட்சிக் கிளை உருவானது. 100க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களைக் கொண்ட இப்பகுதியில் தொழிற்சங்க முன்னணிகள் மத்தியில் இருந்து கட்சியில் சேர்ந்த 15 உறுப்பினர்களைக் கொண்டு இக்கிளை செயல்படத் தொடங்கியது. கடந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலிலும் இங்கே கட்சி போட்டியிட்டது. சிறப்பான பிரச்சாரம் மூலம் அரசியல் அடையாளத்தையும் உருவாக்கினோம். கடந்த ஆண்டு இறுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் உருவாக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற ஏழைகள் குவிந்த இந்தப் பகுதியில் கட்சிக்கு வெகுமக்கள் அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்சி நடவடிக்கைகள், போராட்டங்களுக்கு இக் கிளையிலிருந்து குறைந்த பட்சம் 20பேரும், அதிக பட்சம் 100 பேரும் அணி திரண்டுள்ளனர். கட்சியின் மாவட்ட வேலை விரிவாக்கத்திற்கும் இக்கிளையின் செயல்பாடு உத்வேகத்தை தந்துள்ளது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

சிறப்புக் கட்டுரை

நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாளின் நினைவாக

காம்ரேட்

ரஷ்யப் புரட்சி, 1917 மார்ச் 17 அன்று கொடுங்கோல் ஜார் ஆட்சிக்கும் நில உடைமை ஆதிக்கத்திற்கும் முடிவு கட்டியது. நவம்பர் 7ல் சந்தர்ப்பவாத இடதுசாரிகளின் ஊசலாட்டத்துக்கு பலத்த அடி கொடுத்து, முதலாளித்துவத்தோடு கணக்கு தீர்த்தது. ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக்கி வென்று, பாட்டாளிகள் அரசியல் அதிகாரம் வெல்ல வழிவகை செய்தது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

விவாதம்

இகக (மாவோயிஸ்ட்)ன் இடது சாகசவாதம்:

அதன் உள்ளிருந்தே எழும் கேள்விகள்

அரசியல் பார்வையாளர்

இகக (மாவோயிஸ்ட்)ன் ஒடிஷா மாநில அமைப்புக் கமிட்டியின் செயலாளர் சப்யசாஷி பண்டா சமீபத்தில் வெளியேற்றப்பட்டிருப்பது மாவோயிஸ்ட் கட்சிக்குள் மீண்டும் பதற்றத்தையும், அதன் நடைமுறை பற்றிய காத்திரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இகக (மாவோயிஸ்ட்) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்திலும், பொதுச் செயலாளருக்கு எழுதியிருக்கும் நீண்ட கடிதம் மற்றும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்தி மூலமும் பண்டா கட்சிக்கும் அவருக்குமுள்ள வேறுபாடுகளை விளக்கமாக எடுத்துரைத்திருந்தார். அவர் ஏற்கனவே கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் ஒடிஷா மாவோயிஸ்ட் கட்சி என்ற அமைப்பையும் ஏற்படுத்திவிட்டதாகவும் அதன் பின் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியிருப்பது காலம் கடந்த செயல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

இளைஞர் கழகம்

புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசிய மாநாட்டு தயாரிப்பு கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் 5ஆவது தேசிய மாநாட்டு தயாரிப்புக் கூட்டம் அக்டோபர் 14 அன்று நடைபெற்றது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

நாட்டு நடப்பு

மடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல, குற்றவாளிகள்!

பாலசுந்தரம்

சர்ச்சைக்குரிய மதுரை ஆதினத்து மடாதிபதி அருணகிரிநாதரை நீக்கக்கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது அதிமுக அரசு. இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959ன் பிரிவு 59ன்படி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பலத்த சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் ஆளான நித்யானந்தாவின் நியமனத்தை ரத்துசெய்து அறிவித்து விட்டார் அருணகிரிநாதர். அருணகிரிநாதரை நீக்கிவிட்டு மதுரை ஆதினத்து நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொள்ள வேண்டி தொடுக்கப்பட்ட வழக்கைக் கண்டு அஞ்சிய மடாதிபதி அருணகிரிநாதர், அதிரடியாக நித்யானந்தாவை நீக்கி விட்டார்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

மண்ணில் பாதி

கலகம் நல்லது

இரண்டு பெண்களின் குரல்கள், பெண் விடுதலை குரல்களாக இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. ஒன்று மலாலா என்கிற 14 வயது பாகிஸ்தான் சிறுமியுடைய குரல். மற்றொன்று ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் ஜூலியா கில்லர்டின் குரல்.

மலாலா ஸ்வாட் பகுதியில் உள்ள மத அடிப்படைவாத தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி இப்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் எழுந்து நிற்க முடிகிறது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். அவர் உயிர் பிழைத்து வந்தாலும் மீண்டும் அவரை கொலை செய்வோம் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளார்கள்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

கட்டுரை

இருண்ட தமிழகம்: யார் தருவார் மின்சாரம்?

சந்திரமோகன்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விட்டால், தமிழகத்தில் மின் வெட்டு பறந்து போய் விடும் என்ற மூடநம்பிக்கையில் இருந்த சிறிய தொழிற்சாலை உரிமையாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள் தெளிவடைந்து விட்டனர். கடுமையான மின் வெட்டிற்கு எதிராக, மின் வாரிய அலுவலகங்களை, துணை மின் நிலையங்களை பொதுமக்கள் தினந்தோறும் முற்றுகை இடுகின்றனர். சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். தொழில் நகரங்களில், தொழில் மற்றும் வர்த்தக கழகங்கள் மற்றும் அனைத்து கட்சிகளும் சேர்ந்து முழு அடைப்புகளை நடத்துகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தடையற்ற மின்சாரமா என கேள்வி எழுப்புகின்றனர். கோவை திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களும் 8 மணி நேரம் முதல் 13 மணி நேரம் வரையிலான மின் வெட்டிற்கு தப்பவில்லை. தநா தொழில் மற்றும் வர்த்தக கழகம், மதுரை உயர்நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளது. 3000 மெகா வாட் நுகரும் சென்னைக்கு இரண்டு மணி நேர மின் வெட்டும், 5000 மெகா வாட்டுகளுக்கு கூடுதலாக நுகரும் பிற பகுதிகளுக்கு 16 மணி முதல் 18 மணி நேரம் வரை மின் வெட்டு என்பது அரசியல் சட்ட விதி 14க்கு முரணானது. பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் சமமாக மின்சாரம் வழங்கிட வேண்டும் எனக் கோரியுள்ளது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

களம்

முற்போக்கு பெண்கள் கழக மாநாடு

நாமக்கல் மாவட்ட அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் இரண்டாவது மாநாடு கெப்டம்பர் 30 அன்று குமாரபாளையத்தில் நடத்தப்பட்டது.

தோழர்கள் ஜெயலட்சுமி, கலைச்செல்வி, ஈஸ்வரி ஆகியோர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை வழிநடத்தியது. வர்க்க விடுதலையும் பெண் விடுதலையும் சந்திக்கும் புள்ளி என்ற தலைப்பில் மாநாட்டில் விவாதம் கட்டமைக்கப்பட்டது. தீப்பொறி இதழில் வெளியான தாய்மை வர்த்தகம் கட்டுரையை மாவட்டச் செயலாளர் தோழர் ஜாக்குலின் மேரி வாசித்து விளக்கினார்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

களம்

மன்மோகன் அரசின் மக்கள் விரோத சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக

அக்டோபர் 12 அன்று சமையல் எரிவாயு, டீசல் விலை உயர்வை கண்டித்தும், காப்பீட்டுத் துறையில் 49% அந்நியர் நுழைவை கண்டித்தும், தொழிலாளர்களுடைய ஓய்வூதிய தொகையை 49% தனியாருக்கு வர்த்தக சூதாட்டத்திற்கு திறந்து விடுவதை கண்டித்தும் அகில இந்திய எதிர்ப்பு நாள் கண்டனக் கூட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

களம்

உழைப்போர் உரிமை இயக்கம் நடத்திய மருத்துவ முகாம்

சென்னை மாநகரத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கியமான புறநகரான அம்பத்தூரை சுற்றி 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். மாநகராட்சி மக்கள் வாழும் இடத்தில் 15 ஆண்டுகளாக குப்பைக் கொட்டி மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னுமும் முடிக்கப்படவில்லை.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

களம்

புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசிய மாநாட்டு தயாரிப்பு கூட்டங்கள்

23.10.2012 அன்று தஞ்சை - நாகை மாவட்ட அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகத்தின் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. புரட்சிகர இளைஞர் கழக தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் தோழர் இளவரசன் தலைமை தாங்கினார். மாணவர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கார்த்தி, மாநில அமைப்பாளர் தோழர் பாரதி, மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் டி.கே.எஸ்.ஜனார்தனன், இளங்கோவன் கலந்துகொண்டனர்.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

µµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµµ

Search