களம்
கூடங்குளம்
அணு உலையை உடனடியாக
மூடு!
போராடும்
மக்கள் மீது ஒடுக்குமுறை
ஏவாதே!
அக்டோபர் 29 சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்தவிடாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தயாரானவர்களை கைது செய்த அஇஅதிமுக அரசின் ஒடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து அக்டோபர் 30 அன்று மாநிலம் முழுவதும் மாலெ கட்சி கண்டன நிகழ்ச்சிகள் நடத்தியது. கூடங்குளம் அணுஉலை மூட சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும், தேர்தலில் சொன்ன வாக்குறுதியை ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும், மக்கள் பாதுகாப்பை அச்சத்தை கணக்கில் எடுக்காமல் காவல்துறையை கொண்டு இடிந்தகரையில், சென்னையில் நடக்கும் போராட்டத்தையும் ஒடுக்க காவல்துறையை பல்லாயிரக்கணக்கானவர்களை குவித்து போராட்டக்காரர்களை கைது செய்ததை கண்டித்தும், 30.10.2012 அன்று மாநிலம் தழுவிய அளவில் கட்சி கண்டன நாள் அனுசரித்தது. சென்னையில் அம்பத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர்கள் பாரதி, மலர்விழி, மாவட்டக் கமிட்டி தோழர்கள் மோகன், முனுசாமி, புகழ்வேந்தன், பசுபதி, வேணுகோபால் ஆகியோர் கண்டன முழக்கம் இட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் கொட்டும் மழையிலும் நடைபெற்றது. மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் இளங்கோவன், டி.கே.எஸ்.ஜனார்தனன், ரமேஷ்வர் பிரசாத் உட்பட மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கே.ஆர்.குமாரசாமி தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் சுப்பிரமணி, கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் ரகுராம் தலைமை தாங்கினார். கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் புகழேந்தி கண்டன உரையாற்றினர்கள்.
கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம், ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் நிர்வாகிகள் கண்டனம் முழங்கினர்.
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர்கள் சந்திரமோகன், மோகனசுந்தரம், மற்றும் மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் ஜோதிபாசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.