COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 11, 2021

 

தலையங்கத்துக்குப் பதிலாக

ஒருமைப்பாடு மன்றத்தின் தொழிலாளர் ஒற்றுமை மாநாடு

தலைநகர் மண்டலமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ள முதலீட்டின் பெரும்பகுதி  இருக்கின்றது.

 

மக்கள் விரோத, தேசவிரோத  மோடி அரசே, பதவி விலகு!

தமிழக அரசே,தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்று!

செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 28 வரை கோவை முதல் திருபெரும்புதூர் வரை

பரப்புரை பயணம்

தலைமை: எஸ்.குமாரசாமி

தொகுப்பு: ஜெயபிரகாஷ்நாராயணன்

மோடி அரசே பதவி விலகு, தமிழ்நாடு அரசே தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்று என்ற முழக்கங்களோடு கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புகளான இடது தொழிற்சங்க மய்யம், மக்களுக்கான இளைஞர்கள், மக்களுக்கான மாணவர்கள், பெண்கள் அதிகாரம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் பகத்சிங் பிறந்த நாளான செப்டம்பர் 28 வரை கோயமுத்தூர் முதல் திருபெரும்புதூர் வரை பரப்புரை பயணம் மேற்கொண்டன.

 

பரப்புரை வாகனத்தில் பரப்புரை பயணம் வந்த தோழர்கள்

தோழர் எஸ். குமாரசாமி, கம்யூனிஸ்ட் கட்சி, ஆலோசனைக்குழு தலைவர், தோழர் கூடம்.

தோழர் ஏ.கோவிந்தராஜ், பொதுச் செயலாளர், எல்டியுசி, நாமக்கல்.

தோழர் ஆர். மோகன், மாநில துணைத் தலைவர், எல்டியுசி,  தோழர்கூடம்.

தோழர் எம்.குருசாமி, கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு, கோவை.

தோழர் ஜெயபிரகாஷ் நாராயணன், மாநிலச் செயலாளர், எல்டியுசி, கோவை.

தோழர் புகழேந்தி, மாவட்டச் செயலாளர், எல்டியுசி, நாமக்கல்.

 

பரப்புரை இயக்கத்தின் துவக்கநாள் முதல் நிறைவுநாள் வரை கலந்து கொண்ட தோழர்களின் பார்வையில்...

தோழர் சக்திவேல்:  கல்வி, வேலை வாய்ப்பில், தொழிலாளர் நலனில், மக்கள் நலனில் அக்கறையற்றதாக இருக்கும், நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எதிரான சட்டங்களை உருவாக்கும், மக்களை பிளவுபடுத்தும், நாட்டின் செல்வங்களை கார்ப்பரேட்களுக்கு விற்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நாட்டு நலனுக்கும் எதிராக செயல்படும் ஒன்றிய அரசு ஆட்சி செய்ய தகுதியற்றதாகிவிட்டது.

டாக்டர் அம்பேத்கர் பக்கம்

தொழிலாளர்களும் நாடாளுமன்ற ஜனநாயகமும்

(இந்திய தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்க பயிற்சி முகாமின் இறுதி கூட்டத் தொடரில் நிகழ்த்தப்பட்ட உரை)

பக்கம் 151 - 161, தொகுதி 1,பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு

இன்று மாலை உங்களிடையே வந்து உரையாற்றுமாறு எனக்கு அன்பான அழைப்பு விடுத்தமைக்காக உங்கள் செயலாளருக்கு என் பாராட்டுகள். இந்த அழைப்பை ஏற்க முதலில் நான் தயங்கினேன். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

Sunday, October 10, 2021

 கொரோனா கால கல்வி


வே.சீதா


கொரோனா என்ற பேரிடர் நாட்டையும், மக்களையும் அனைத்து வகையிலும் புரட்டிப் போட்டுவிட்டது. நாட்டின் அனைத்து பிரிவு மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டனர்.

மலையாளக் குடிவார மசோதா 


பெரியார் சொல் கேளீர்.....

 
குடி அரசு, 1926 (2) குடி அரசு - தலையங்கம் - 18.07.1926
பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி 3, பக்கம் 62 - 67


மலையாளக் குடிவார மசோதா என்கிற ஒரு மசோதாவின் பேரில்சென்னை சட்டசபையில் இவ்வாரம் வாதம் நிகழ்ந்து வருகிறது.

 

பா. .. ஆட்சியின் அடக்குமுறை அவலங்களும் மக்கள் போராட்டங்களும்

ஆர்.வித்யாசாகர்

மதவாத பாசிச பா . . . ஆட்சியில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, வரிச்சுமை, கருப்பு சட்டங்கள், கடுமையான ஒடுக்குமுறை கடுஞ்சுமைகளாக சாமான்ய மக்களின் வாழ்க்கையை நாளுக்கு நாள் அரித்துக்கொண்டிருக்கிறது

Sunday, September 5, 2021

இன்னும் எத்தன நாளைக்குத்தான் ட்ரெய்லர்?
மெயின் பிக்சர் எப்போ....?


எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று பாரதி பாடக் கேட்டோம். இன்று தமிழ்நாட்டில் எங்கும் முன்னாள் ஆளும் கட்சி பிரமுகர்கள் ஊழல்கள்தான் பேச்சாக இருக்கிறது.

நினைவு நல்லது வேண்டும்
நிதியமைச்சர் அவர்களே!


எஸ்.குமாரசாமி


தமிழ்நாட்டின் நிதியமைச்சர் முதலமைச்சருக்கு திருத்தம் சொல்வது நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம், அமைச்சரவை முறை தழைப்பதாக மகிழ்வதா? அல்லது அவர் சொன்ன திருத்தத்திற்காக வருந்துவதா?

தேசவிரோத பணமயமாக்கல்


சமூகப் பொறுப்பில் இருந்து  அரசு பின்வாங்கும் இயக்கப்போக்கு கிட்டத்தட்ட நிறைவுறுகிறது


பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ என்று பாரதி கேட்டான். அன்று, அப்படியில்லை என்று பதில் கிடைத்தது; கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.

மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் அமைப்புகளின் மாநில ஊழியர் கூட்டம்


மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் அமைப்புகளின் மாநில ஊழியர் கூட்டம், ஆகஸ்ட் 22 அன்று, கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
தோழர்கள் ஆண்டனி தினகரன், மோகன்ராஜ், சீதா, சுகுமார் ஆகியோர் கூட்டத்துக்கு  தலைமை தாங்கினர்.

பெண்கள் அதிகாரம் மாநில ஊழியர் கூட்டம்

 கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஆகஸ்ட் 8 அன்று பெண்கள் அதிகாரம் அமைப்பின் கூட்டம் சென்னையில் தோழர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அறிமுக தாள் முன்வைக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் பக்கம்


பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை


முன்னுரை (முதல் பதிப்பு, டிசம்பர் 1940)
 

பக்கம் 18 - 25, தொகுதி 15
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு


......இந்தியா முழுவதிலும் மேலாதிக்கம் செலுத்தக்கூடிய ஒரே மத்திய அரசாங்கம் அமைக்கப்படுவதை எதிர்ப்பதே பாகிஸ்தான் கோரிக்கையின் சத்தும் சாரம்சமும் எனலாம். பாகிஸ்தானுக்கு ஒன்றும், இந்துஸ்தானுக்கு ஒன்றுமாக இரண்டு மத்திய அரசாங்கங்கள் அமைக்கப்பட  வேண்டுமென்று  முஸ்லீம்கள் கோருகின்றனர்.

பெரியார் சொல் கேளீர்....


தமிழிற்குத் துரோகமும்
ஹிந்தி பாஷையின் இரகசியமும்

- சித்திரபுத்திரன்


07.03.1926 , குடி அரசு 1926 (1)


பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 2, பக்கம் 154 – 158


நமது நாட்டின் க்ஷேமத்திற்காக என்று எந்தக் காரியம் ஆரம்பிக்கப்பட்டாலும், அவற்றை நம் நாட்டுப் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டு

திமுக அரசின் விவசாய நிதிநிலை அறிக்கை கிராமப்புற மக்களின் பிரச்சனைகளுக்கான, விவசாய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வை நோக்கி நகர்கிறதா??

 ஆர்.வித்யாசாகர்

கர்நாடகா மற்றும் ஆந்திரா  மாநிலங்களை  அடுத்து,  விவசாயத்திற்கென தனியான நிதிநிலை அறிக்கை வெளியிடுவதில் தமிழ் நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. தமிழ் நாடு வரலாற்றில் முதன் முறையாக விவசாயத்துறைக்கென பிரத்யேகமான நிதிநிலை அறிக்கையை (2021-22) திமுக அரசு  வெளியிட்டிருக்கிறது. 

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி


உமாமகேஸ்வரன்


மார்க்ஸ் வரலாற்று நிகழ்வுகள் முதலில் துக்ககரமானதாகவும் மீண்டும் அதுவே கேலிக்கூத்தாக முடிந்து விடுகின்றது என்று கூறினார். தற்போதைய ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் மீண்டும் அதை மிகச்சரியாக மெய்ப்பிக்கின்றன.

செப்டம்பர் 28, தொழிலாளர் ஒற்றுமை மாநாட்டை
வெற்றி பெறச் செய்வோம்!


ஒருமைப்பாடு மன்ற கூட்டங்களில் தீர்மானம்

 செப்டம்பர் 28, தொழிலாளர் ஒற்றுமை மாநாட்டிற்கான தயாரிப்பு கூட்டம், மறைமலைநகரிலும் வல்லக்கோட்டையிலும், ஆகஸ்ட் 29 அன்று நடந்தது. அந்தந்த பகுதி தொழிற்சாலைகளின் தொழிலாளர் முன்னோடிகள் கலந்து கொண்ட கூட்டங்களின் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் 

இன்னுமொரு வெற்றி


கோவை பிரிக்கால் நிர்வாகத்தால் 302 பேர் வெளிமாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு (OP.எண்: 6/2019) சென்னை தொழிற் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது.

Monday, August 2, 2021

தீண்டாமை

25.04.1926 , குடி அரசு

சொற்பொழிவு

பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 2, பக்கம் 240 - 243 )

 'இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை, ஒரு பெருமையெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை.

 சார்பட்டா பரம்பரை
 ரோசமான ஆங்கில குத்துச்சண்டை


கே.பாரதி


தலித் அடையாள அரசியல், தலித் போராட்ட அரசியல் பற்றி பேசும் படங்கள், குறுகிய காலத்திலேயே தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்கவையாக வெளிவந்துவிட்டன.

Sunday, August 1, 2021

 திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆயின?


செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் முதல் 

செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்த நாள் வரை 

மாநிலம் தழுவிய பரப்புரை பயணம்


வெள்ளையனே வெளியேறு என, ஆகஸ்ட் 9, 1942 அன்று இந்தியா முழுவதும் முழங்கியது. 2021 ஆகஸ்ட் 9 அன்று நாடு மோடி வெளியேறு என முழங்கும்.
இந்தியாவுக்கு நேர்ந்த  செயற்கைப் பேரிடரான மோடி அரசு, இயற்கை பேரிடரான கொரோனாவை விடக்கொடியது.

மகப்பேற்று நல மசோதா பற்றி

28.07.1928

பம்பாய் சட்டமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர்

நான் மசோதாவின் முதலாவது வாசிப்பை ஆதரிக்க எழுகிறேன். இதை செய்யும் போதே, இந்த மசோதாவுக்கு எதிராக எழுப்பப்பட்ட  ஆட்சேபங்களுக்கும் பதில் சொல்லுகிறேன்.

 நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் குரல்


கொள்முதல் நிலைய தொழிலாளர்களின்
உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்


நாகப்பட்டினம் மண்டலத்தில் 300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

 ஆதிக்க மூளைகளின் குப்பைகளை அகற்ற புறப்பட்டுவிட்டார்கள் தூய்மைப் பணியாளர்கள்


கே.பாரதி


கொரோனா தீவிரமடைந்து புரட்டிப் போட்டபோது, தூய்மைப்பணியாளர்களின் தலைகளின் மீது மலர் தூவப்பட்டது. கால்கள் தண்ணீரால் கழுவப்பட்டன. இப்போது இரண்டாம் அலை வடிகிறது

 ஸ்டேன் ஸ்வாமி உயிரிழப்புக்கு
பாசிச மோடி ஆட்சியில் நிலவும்
நீதி பரிபாலன முறையே காரணம்


'ஒரு நாள் சுதந்திரம் மறுக்கப்பட்டாலும் அந்த ஒரு நாள் கூட பல நாட்கள்தான்' என்று  உச்சநீதிமன்ற நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் குறிப்பிட்டார்.

 பிகாசஸ் உளவு: முழுமுற்றூடான அதிகாரத்துக்கான பாசிச வெறித் தேடல்


கைதுகள், சாவுகள், படுகொலைகள், உரிமை பறிப்புகள், மறுப்புகள், பெரும்பான்மையான மக்களிடம் இருப்பதையும் பறித்து அவர்களை  ஏதிலிகளாக்குதல், எந்நேரமும் பதட்டத்திலேயே வைத்திருத்தல், அரசியல்சாசன நிறுவனங்களை கட்டுப்படுத்துதல், ஒடுக்குமுறை சட்டங்கள், வாழ்வாதார பறிப்பு சட்டங்கள், ஆதார் போன்ற எதேச்சதிகார நடைமுறைகளை திணிப்பது.......

 என் உடல் என் தேர்வு


எஸ்.குமாரசாமி


பெண்ணின் வாழ்க்கை குடும்ப பந்தத்தால் அடையாளம் பெறும். பிள்ளைப் பேறால் முழுமை பெறும். சில ஆயிரம் ஆண்டுகளாக இந்த குப்பை கருத்து பெண்களின் தலையிலும் நுழைக்கப்படுகிறது.

 திரைப்பட ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா, 2021
அரசியல்சாசனம் மற்றும் கருத்துரிமைக்கெதிராக விடப்பட்ட சவால்


உமாமகேஸ்வரன்


திரைப்பட ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா 2021, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

“மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படும் ஜனநாயகம்”

மியான்மரில் நடப்பது என்ன?


ஆர்.வித்யாசாகர்

 தற்போது மியான்மர் என்று அறியப்படும் நாடுதான் அக்காலத்திய பர்மா. 1952ல் தமிழில் வெளியான 'பராசக்தி' திரைப்படம் பார்த்தவர்களுக்கு பர்மாவிலிருந்து இரண்டாம் உலகப்போர் சமயத்தில் விரட்டியடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பர்மிய அகதிகளை பற்றி நன்றாகத் தெரியும்.

 பாசிஸ்டுகளின் ஆய்வுக் கூடமாக
லட்சத்தீவு மாறுகிறதா
?


உமாமகேஸ்வரன்


கடந்த சில மாதங்களாக லட்சத்தீவு மக்கள் பெரும் கொந்தளிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். மிகவும் அழகான, அமைதியான இந்த தீவு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு அப்படி என்ன திடீரென்று பிரச்சனை ஏற்பட்டது?

Friday, July 2, 2021

அனைத்து தளங்களிலும்
அனைத்தும் தழுவிய
மக்கள் சார்பு நடவடிக்கைகள் வேண்டும்


இது முன்னோட்டம் மட்டுமே என்று ஆளுநர் உரை மீதான பதிலுரையில் முதலமைச்சர் சொல்கிறார்.

உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச்சட்டத்தை, 

ஜனநாயகத்தை காக்க வேண்டும்


எஸ்.குமாரசாமி


தேசவிரோதம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 அ பிரிவு, சுதந்திர இந்தியாவில் ஜனநாயக உரிமைகளை பறிக்க, கருத்து சுதந்திரத்தை நசுக்க பயன்படுத்தப்படுகிறது.

அநீதி எங்கே நிலவினாலும், அது, 

எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தலே


எஸ்.குமாரசாமி


என்.ஆனந்த் வெங்கடேஷ். இவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. அநீதி எங்கே நிலவினாலும், அது, எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தலே என்று மார்ட்டின் லூதர் கிங் சொன்னதன் வெளிச்சத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ஒருபால் ஈர்ப்பு உடையோர் பிரச்சனையில் அநீதிக்கு முடிவு கட்ட 'உளபூர்வமாகவும்' 'இதயபூர்வமாகவும்' விரும்பினார்.

டாக்டர் அம்பேத்கர் பக்கம்


ஒரு விசாவுக்காக காத்திருத்தல் 

(இரண்டு)


மக்கள் கல்வி கழகத்தின் சேகரிப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட
கையெழுத்து பிரதி


பக்கம் 15 - 22, தொகுதி 25
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு

1916ல் நான் இந்தியாவுக்குத் திரும்பினேன்.

 பெரியார் சொல் கேளீர்.....


ஆச்சாரியார் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா?


12.06.1938 , குடி அரசு தலையங்கம்


பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 26, பக்கம் 378 – 382


ஆச்சாரியார் பிரதம மந்திரியானாலும் ஒப்பற்ற ஒரே தனி மந்திரியானாலும் அல்லது சர்வாதிகாரமுள்ள தன்னாட்சி உள்ள ஏகபோக சக்கரவர்த்தியேயானாலும் அவர் இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களான (100க்கு 97 பேர்களான) பழங்குடி மக்களுக்கு அன்னியப்பட்ட ஒரு பார்ப்பனர் - அதுவும் ஆரியப் பார்ப்பனர் என்பதையும் அதிலும் ஆரிய மதம், ஆரியக் கலை, ஆரியப் பழக்கவழக்கம் ஆகியவைகளில் குரங்குப் பிடிவாதமுள்ள ஒரு வகுப்பைச் சேர்ந்த - ஒரு கருத்தை - கொள்கையைக் கொண்ட ஒரு அன்னிய மனிதன் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது என்பதை அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

தலைநகர் மண்டல தொழிலாளர்களுடன் 

திருபெரும்புதூரில் மூன்று நாட்கள்


சான்மினா சங்க கிளைத் தலைவர் தோழர் நித்தியானந்தம் திருமணம் திருமால்பூரில் 21.06.2021 அன்று காலை நடைபெற்றது. திருமணத்திற்கு தோழர்கள் குமாரசாமி, பாரதி, ராஜகுரு, சுரேஷ், ஜேம்ஸ், ராஜேஷ், தினகர், பாலாஜி, சதீஷ் சென்றிருந்தோம்.

ஆட்டோ உதிரிபாக நிறுவனமான கோவை பிரிக்கால் தொழிலாளர் போராளிகளுக்கு செங்கல்பட்டு - காஞ்சி மாவட்ட வாகன தொழிலாள
ஒருமைப்பாடு


கே.பாரதி


தோழர் குமாரசாமி தலைமையில் 2007ல் சங்கம் துவங்கி பற்பல போராட்டங்கள் நடத்தி, குற்றவியல் வழக்குகளை, பழிவாங்கும் வேலை நீக்கங்களை, பணியிட மாற்றங்களைச் சந்தித்து, இரண்டு ஒப்பந்தங்கள் போட்டு, அதற்குப் பின் பிரச்சனைகள் எழுந்து, 14 வருடங்களாக அயராமல் போராடி வருபவர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள்.

 பெட்ரோல் டீசல் விலையும்
கொரோனா அலையும்


உமாமகேஸ்வரன்


பெட்ரோல் டீசல் விலைக்கும் கொரோனா அலைக்கும் அப்படி என்ன தொடர்பு? உலகையே புரட்டிப் போட்ட கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் கடந்த வருடம் 2020 ஜனவரியில் தொடங்கி அக்டோபர் வரை நீடித்தது.

 

வேகமாக சிதைக்கப்படும் கூட்டாட்சி முறையும் அரசியலமைப்பு உரிமைகளும் 

ஆர்.வித்யாசாகர்

கிரேக்க புராண கதைகளில் இக்காரஸ் என்ற ஒரு கதா பாத்திரம் உண்டு. அவனுடைய தந்தை  தேடலுஸ் மனிதன் உயரே பறக்க, பறவையின் இறகுகள் மற்றும் மெழுகை கொண்டு இறக்கைகளை கண்டுபிடித்தான். அதைக்கொண்டு இக்காரஸ்  பறக்க முயன்ற போது, மிக உயரத்தில் பறந்ததால்  சூரிய வெப்பத்தால் மெழுகு உருகி இறகுகள் விழுந்துவிடும் என்று தேடலுஸ் எச்சரித்தான்.  மேலே பறக்க ஆரம்பித்த இக்காரஸ் மேலே பறக்க பறக்க தனக்கு ஏதோ புதிய அதிகாரம் வந்துவிட்டது போல் எண்ணிக்கொண்டு அந்த அதிகார போதையில் மிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தான். அந்தோ பரிதாபம்! சூரிய வெப்பத்தால் இறகுகள் உருகி விட நடுக்கடலில் போய்  விழுந்தான்.

Thursday, June 3, 2021

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி அரசுக் கட்டுப்பாட்டில் வர வேண்டும்!


சென்னையின் பெருமைமிகு கல்வி நிலையங்கள் என்று அறியப்படுகிற பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் குற்ற முடை நாற்றம். செய்திகள் வெளி வர வெளி வர குமட்டுகிறது. பள்ளிகளின் பெயர்களை முழுவதுமாகக் கூட சொல்லாமல், பத்ம சேஷாத்ரி, செட்டிநாட், மகரிஷி என்று அந்தப் பெயர்களை  'ஷார்ட்டாக' 'ஸ்வீட்டாக' 'ஸ்டைலாக' சொல்வார்கள். அந்த நாற்றம் பிடித்த பிம்பத்தை இத்தனை ஆண்டுகளாக தூக்கிப் பிடித்து பாதுகாத்திருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் உடல்நலம் காக்க, உயிர் காக்க
ஆலைகள் இயங்க கூடாது!


அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் இந்த காலத்தில் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும்!


(தலைநகர் தொழில் மண்டல தொழிலாளர் முன்னோடிகளுடன் JITSI என்ற செயலி மூலம் நடந்த மெய்நிகர் கூட்டத்தில் 23.05.2021 அன்று தோழர் எஸ்.குமாரசாமி முன்வைத்த கருத்துகள்)


தமிழ்நாட்டின் தலைநகர் தொழில் மண்டலத்தில் காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டாவது  அலையில் மடிந்த தொழிலாளர்களுக்கும், மடிந்த மற்ற அனைவருக்கும்  இடது தொழிற்சங்க மய்யம் (LTUC) அஞ்சலி செலுத்துகிறது.

ஆட்டோமொபைல் துறையும்
தொழிலாளர்களின் உயிரச்சமும்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு கவச உடை அணிந்து, தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சென்று சந்திக்கிறார். தொற்று கட்டுப்பாட்டுக்காக முதலமைச்சர் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தொற்று

கோவை பிரிக்காலில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தொழிலாளர் மத்தியில் இருந்து எதிர்ப்பு எழுந்த பிறகு, ஒரு வாரம் விடுமுறை என நிர்வாகம் அறிவித்தது. எல்டியுசி சங்க உறுப்பினர்களின் ஊதியத்தில் இரண்டு நாட்கள் ஊதியத்தைப் பிடித்து நிவாரண நிதியாக தரும் நிர்வாகத்தின் முயற்சியும் தொழிலாளர்களின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

தமிழக அரசுக்கு
மதர்சன் தொழிலாளர்களின் வேண்டுகோள்


  • தமிழக அரசு உடனே மதர்சன் தொழிற்சாலையை பார்வையிட வேண்டும்.
  • கொரோனா காலகட்டத்திலும் மதர்சன் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு நல்ல சாப்பாடு கிடையாது.
  • இரவு பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு உணவு கிடையாது.
  • முக கவசம் கிடையாது.
  • கிருமி நாசினி கிடையாது.
  • தனிநபர் இடைவெளி கிடையாது.
  • இவை எதுவுமே தராமல் தொழிலாளர்களை வேலைக்கு வா என்று நிர்வாகம் சொல்லுகிறது.
  • நாங்கள் இந்த நிலையில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றால் நாங்கள் சுடுகாட்டுக்குதான் செல்லவேண்டிய அவலம் ஏற்படும்.
  • கொரோனா தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு இரண்டு முக கவசம்தான் நிர்வாகம் தந்திருக்கிறது.
  • மதர்சன் நிறுவனத்தில் எந்த உயிர் பாதுகாப்பும் கிடையாது.
  • இந்த கொரோனா காலகட்டத்தில் தொழி லாளர்களுக்கு எந்த ஒரு சலுகைகளும் கிடையாது.

இப்படிக்கு
கொரோனா காலத்தில் குடும்பத்துடன் தத்தளிக்கும் மதர்சன் தொழிலாளர்கள்
 

மதர்சன் என்ற முகநூல் பக்கத்தில் இருந்து

டாக்டர் அம்பேத்கர் பக்கம்


இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இதற்கு யார் பொறுப்பு?


பக்கம் 167 - 177, தொகுதி 36
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு


.....சென்ற இதழ் தொடர்ச்சி


சொத்து சம்பந்தப்பட்ட வரையிலும் ஒரு மனைவியை ஓர் அடிமையின் நிலைக்கு மனு தாழ்த்திவிட்டார்.

பெரியார் சொல் கேளீர்.....


தேசாபிமானம்


29.09.1935 , குடி அரசு
தலையங்கம்


தேசாபிமானம், தேச பக்தி என்பவைகள் சுயநிலச் சூட்சி என்றும், தனிப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் வகுப்பு நிலத்துக்கு ஆக பாமர மக்களுக்குள் புகுத்தப்படும், ஒரு (வெறி) போதையென்றும் பல தடவை நாம் சொல்லி வந்திருக்கிறோம்.

குடியேறியோர் காலனி ஆதிக்கம், இனவெறி பாசிசம் என இஸ்ரேலை அழைக்க முடியுமா?


எஸ்.குமாரசாமி


கேள்வி: இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை முடிந்துவிட்டதா?
பதில்: சுதந்திர பாலஸ்தீனம் உருவாகும் வரை பாலஸ்தீனர்கள் ஓய மாட்டார்கள். இஸ்ரேலும் நிம்மதியாக இருக்க முடியாது.
கேள்வி: இஸ்ரேலுக்கு வாழும் உரிமை உண்டு (Israel has the right for its existence ) என்று அடிக்கடி, அய்க்கிய அமெரிக்காவும், மேலை நாடுகளின் ஊடகங்களும் சொல்கின்றனவே?

இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது இந்திய ஒன்றிய அரசின் கடமை 


இந்தக் கடமையை தட்டிக் கழிப்பது கயமை


கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்ய, கட்சியை வளர்க்க, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க, ஆட்சிகளைப் பிடிக்க, நிறுவனங்களை சிதைக்க, மக்களை பிளவுபடுத்த, அவர்களை பதட்டத்திலேயே வைத்திருக்க, கலவரங்களை உருவாக்க, பொய்ச் செய்திகளைப் பரப்ப, எதிர்ப்பாளர்களை சிறையில் தள்ள....

இந்த அரசின் செயல்பாடுகள் ஏழைகளை மட்டுமில்லை,
ஓரளவு பொருளாதார வளம் மிக்க இந்திய சமூகத்தையும்
சீரழிக்கத் துவங்கி இருக்கிறது


(IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணித்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் 116 பேர் கையொப்பமிட்ட அறிக்கை) தமிழில் : கை.அறிவழகன்


அன்புள்ள பிரதமருக்கு,

Friday, May 7, 2021

 தலையங்கத்துக்குப் பதிலாக

மூடத்தனமாகவும் குற்றமய அலட்சியத்தோடும்
மக்களை துன்புறுத்தும்
மோடி அரசே பதவி விலகு
!


இந்தியா சொல்கிறது: மோடியே பதவி விலகு!
இந்திய மக்கள் சொல்கிறார்கள்: மோடியே, நீங்கள் இனியும் பிரதமராகத் தொடர்ந்தால் நாடு தாங்காது.

 மோடியால் தண்டிக்கப்படும் மக்கள்
மோடியை தண்டிக்காமல் விட்டுவிடுவார்களா?


எஸ்.குமாரசாமி


கொரோனா பரவ காரணமாக இருந்த மோடி கும்பல், கொரோனா பரவி பாதிப்புக்கு உள்ளாக்கி உயிர்ப்பலி வாங்கியபோது கையைப் பிசைந்து நின்றது. அரசின் கையாலாகாத்தனம் நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, ஒன்றிய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்தபோது, உச்சநீதிமன்றம்தான் ஒன்றிய அரசை மீட்க வேண்டியிருந்தது.

 ஊழல் மலிந்த அடிமை அஇஅதிமுக அரசு,
அதன் பிற்போக்கு கூட்டணி முறியடிக்கப்பட்டுள்ளது!


எஸ்.குமாரசாமி


திமுக அணி வெற்றி பெற்றுவிட்டது. 159 இடங்களுடன் ஆட்சி பொறுப்பேற்றுவிட்டது. அலை எதுவும் அடித்து, ஜெயலலிதா தோற்ற காலங்களைபோல், அதிமுகவை துடைத்தெ றிந்துவிடவில்லை.

 கம்யூனிஸ்ட் கட்சி, அம்பத்தூர் தொகுதியில் மிகப்பெரிய பொதுக்கூட்டங்கள், இருசக்கர வண்டி பேரணிகள், கவனத்தை ஈர்க்கும் பிரசுரங்கள் உள்ளிட்ட ஆகச்சிறந்த தேர்தல் பரப்புரையை கட்டமைத்தது. தேர்தலுக்கு முன்பும், தேர்தல் நேரத்திலும் நடந்த போராட்டங்கள், கட்சிக்கு நன்மதிப்பை தேடித் தந்தன. ஆனாலும் ஓர் அரசியல் கட்சியாக, கட்சியின் குறுகிய செல்வாக்கு, கிட்டத்தட்ட இல்லாத வேர்க்கால் மட்ட அமைப்பு, சென்னை, திருவள்ளூரில் வீசிய திமுக ஆதரவு அலை என்ற பின்னணியில், கட்சி 807 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

 கோவை பிரிக்காலில்


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது
மீண்டும் தர்மமே வென்றது
!


ஜெயபிரகாஷ் நாராயணன்


2017ல் தமிழ்நாடு நூற்றாண்டு கால வரலாறு காணாத கடும் வறட்சியை சந்தித்தது. தமிழ்நாட்டு விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். விவசாயத்தையே நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் வேலை, வருமானமின்றி பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்

 10 பி இல்லனா பத்தாது!
 அய்ந்து முறை பெற்ற கதை!


எஸ்.குமாரசாமி


இந்தியாவில் தொழில் தகராறுகள் சட்டம் 1947லிருந்து, செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் தொடர்பான சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலுக்கு concurrent list உட்பட்டவையாகும்.

டாக்டர் அம்பேத்கர் பக்கம்


இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இதற்கு யார் பொறுப்பு?


மகாபோதி சஞ்சிகை,
மே -  ஜுன், 1951
பக்கம் 167 - 177, தொகுதி 36
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
நூல் தொகுப்பு


.....இந்தியாவில் பெண்களின் நிலை ஒரு காலத்தில் இருந்ததிலிருந்து பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பெரியார் சொல் கேளீர்.....


சீர்திருத்தமா?
அழிவு வேலையா?


13.01.1945 , குடி அரசு
பெரியார் இன்றும் என்றும்
தொகுதி 25, பக்கம் 353 – 354


1944, டிசம்பர் 29 - 31 தேதிகளின் கான்பூரில் நடந்த
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாதார் மாநாட்டு தலைமையுரை


தோழர்களே! தாய்மார்களே!
சாதி முறைகள் என்பவையெல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்து கடவுள்கள் பேராலும் சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன.

 

"ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை"

மக்களின் பிரச்சனையை காரணம் காட்டி புறவாசல் வழியே மீண்டும் நுழைய முயற்சிக்கும் ஸ்டெர்லைட் கார்ப்பரேஷன்

ஆர்.வித்யாசாகர்
 

சுற்றுப்புற சூழலை நச்சாக்கி மக்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை காணாமல் அடித்து, 13 உயிர்களை துப்பாக்கி சூட்டிற்கு பலியாக்கிய ஸ்டெர்லைட்  ஆலை மக்களின் போராட்டங்களின் காரணமாக 3 ஆண்டுகளாக  மூடப்பட்டு இருக்கிறது.

Friday, April 30, 2021

மே தினம் வெல்லட்டும்

மூடத்தனமாகவும் குற்றமய அலட்சியத்தோடும்

மக்களை துன்புறுத்தும் மோடி அரசே பதவி விலகு!

இந்தியா சொல்கிறது: மோடியே பதவி விலகு! இந்திய மக்கள் சொல்கிறார்கள்: மோடியே, நீங்கள் இனியும் பிரதமராகத் தொடர்ந்தால் நாடு தாங்காது.

உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தைக்குச் சென்றுள்ளன. இருநூறு கோடி தடுப்பூசிகள் வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவுபூர்வ புரிதலும் அறிவியல் அணுகுமுறையும் ஆட்சியாளரிடம் இல்லை. தலைநகர் டில்லியின் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. உயிர் காக்கும் ஆக்சிஜன் இல்லை. போதுமான மருத்துவர், பணியாளர் இல்லை.

கவலை, அச்சம், கையறுநிலை, இயலாத கோபம், விரட்டும் மரணம், இடமில்லா சுடுகாடுகள், இடுகாடுகள், பிணங்கள் எரிக்கப்படும் புகை மூட்டம் என இந்தியா மூச்சுத் திணறுகிறது.

உயர்நீதிமன்றங்கள் கிடுக்கிப் பிடி போட்டு கேள்வி கேட்கும்போது, மோடி பக்தர்கள், மரம் வளர்த்தால் ஆக்சிஜன் பிரச்சனை தீரும் என்று ஆணவத்துடன் ஆலோசனை சொல்கிறார்கள். அரச நீதிமன்றமாகிவிட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற விமர்சனங்களை, கேள்விகளை மழுங்கடிக்கப் பார்க்கிறது. உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசும் மாநில அரசும், விவரங்கள், தரவுகள் எதுவும் தராமல், கொரோனா, ஆக்சிஜன் என உணர்ச்சிமய வசனம் பேசி, எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் என, ஆட்கொல்லி ஸ்டெர்லைட்டை திறக்கப் பார்க்கிறார்கள். கெடுவாய்ப்பாக, தேசத்தின் பிரச்சனை என்ற ஆளும் கூட்ட கருத்தொற்றுமையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி கூட்டணியும் சிக்கிக் கொண்டுவிட்டது.

குற்றவாளி கூண்டில் மோடியை நிறுத்துவோம்!

உரிய காலத்துக்கு முன்னரே அரித்துவார் கும்பமேளாவுக்கு அனுமதி, மேற்கு வங்கத் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பெரும் கூட்டம் சேர்ப்பது என கொரோனாவைப் பரப்பும் குற்றத்தை செய்தது நீங்கள்தான்.

கொரோனாவை வீழ்த்திவிட்டு, மானுடம் காப்பதில் உலகுக்கு உதவினோம் என்று வசனம் பேசிய மோடியும் கொரோனாவை வெற்றி கொண்ட வீரர் என்று மோடியை பாராட்டி தீர்மானம் போட்ட பாஜகவும்தான், மூடத்தனத்தால், முரட்டுத்தனத்தால், கொரோனா இரண்டாவது அலை மக்களை வேட்டையாட அனுமதித்த குற்றவாளிகள் ஆவீர்கள்.

கோவேக்சின், கோவிஷீல்ட் உற்பத்தியை நாட்டுடைமையாக்காமல், புனாவாலாவும் கிரண் மஜ÷ம்தாரும் ஆயிரம் ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க அனுமதித்ததும் நீங்கள் செய்த குற்றமே.

நூறு கோடி பேரை துன்பத்தில் தள்ளி, அம்பானியும் அதானியும் 3.75 லட்சம் கோடி கூடுதல் சொத்து சேர்க்க வழி செய்த குற்றத்துக்கும் நீங்களே பொறுப்பு.

மக்களை நிம்மதியாக வாழவிடாத 

விவசாயிகளை வாட்டி வதைக்கிற 

தொழிலாளர்களை தாக்குகிற

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிற

இளையோர் எதிர்காலத்தை இருட்டில் தள்ளுகிற

தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினரை அச்சமூட்டுகிற

அவர்கள் சுதந்திரத்தைப் பறிக்கிற

மாநில உரிமைகளை விழுங்குகிற

பெரும்பஞ்சத்தில் உயிரிழந்தவர்களை விட

அதிக எண்ணிக்கையிலான மக்களை

கொரோனாவால் சாகவிட்டுள்ள

செயற்கைப் பேரிடரான முதலாளித்துவத்தை

இயற்கைப் பேரிடரில் வேட்டையாடவிட்ட

மோடி அரசை

மே நாளில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம்!

மக்கள் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால்

மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று

தண்டனை வழங்குவோம்!

கம்யூனிஸ்ட் கட்சி (CP)

இடது தொழிற்சங்க மய்யம் (LTUC)

தோழர் கூடம், 23 , மாரியம்மன் கோயில் தெரு, கல்யாணபுரம், அம்பத்தூர், சென்னை - 600053.   7358214170

 

 

Search