COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, December 3, 2020

பாஜகவுடனான அஇஅதிமுக கூட்டணி
நாட்டுக்கும் வீட்டுக்கும் தீங்கு விளைவிக்கும்


எஸ்.குமாரசாமி


பாஜகவின், இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட அரசு விழாவில், அஇஅதிமுகவின் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும், உள்கட்சி விவாதங்கள் இல்லாமல், கூட்டணி பேச்சுவார்த்தைகள் இல்லாமல் பாஜக - அஇஅதிமுகவின் 2021 தேர்தல் கூட்டணியை அறிவித்தார்கள்.

 எழுவர் விடுதலைக்கான காலவரையற்ற பட்டினிப் போராட்டம் 


மக்கள் உரிமைகளுக்காக, ஜனநாயகத்துக்காக, நீதித்துறை சுதந்திரத்துக்காக கொரோனா காலத்திலும் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி, ஏழு தமிழர் விடுதலைகாக நவம்பர் மூன்றாவது வாரம் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு செய்தது.

 பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்


எஸ்.குமாரசாமி


2020 நவம்பர் 7 அன்று, பீகாரில், நான்காவது முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றார். கரப்ஷ்ன், க்ரைம், கம்யூனலிசம், அதாவது, ஊழல், குற்றம், மதவாதம் என்ற மூன்றுக்கும் தமது அரசியல் எதிரானது என்றார் நிதிஷ்குமார்.

 ஆட்சியாளர்களின் குளறுபடிகளால்

மாணவர்களின் எதிர்காலம் இருளாகக் கூடாது

தமிழ்நாட்டின் ஒப்பீட்டுரீதியில் உயர்வான மருத்துவ தரத்தை சீர்குலைக்க ஒன்றிய அரசு விடாப்பிடியான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

 

கண்ணோடு காண்பதெல்லாம்

சங்கிகளுக்குச் சொந்தமில்லை

பாசிசத்துக்கு தன் கண்ணில் படும் அனைத்தும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இப்போது அது இணையதளங்களில் வெளியாகும் படங்கள், செய்திகள், துணுக்குகள், கேலிப் படங்கள் என அனைத்தும் அதன் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என விரும்புகிறது.

 

காதல் ஜிகாத் தடுப்புச் சட்டங்கள்

இந்து ராஷ்டிரா நிகழ்ச்சிநிரலை முன்னகர்த்தவே

2024 வரை நான் பிரதமராக இருப்பேன் என்று 2014ல் சொன்ன மோடி, இப்போது 2014 - 2029 காலகட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்று சொல்லியிருக்கிறார்.

 

மறைந்த அமைச்சர் துரைகண்ணு தொடர்பான சொத்து குவிப்பு விவகாரத்தில்

முறையான விசாரணை நடந்தாக வேண்டும்

தமிழ்நாட்டு விவசாயம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. சிறுகுறு, நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள் என விவசாய சமூகத்தின் வாழ்க்கை துயரம் நிறைந்ததாகவே இருக்கிறது. நிலமற்றவர்கள் நிலம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பும்போது,

 

டிசம்பர் 25, 2020

ஆதிக்க எதிர்ப்பு நாள்

ராமையாவின் குடிசையில் வைக்கப்பட்ட தீ

இன்னும்  எரிந்து கொண்டிருக்கிறது

தீபாவளிக்கு அடுத்த நாட்களில் பெய்த மழையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்காத அதிகாரிகளின் குற்றமய அலட்சியத்தால் 10,000 மூட்டைகள் நெல் நனைந்து நாசமானது.

 

தன்னிறைவு 3.0 அறிவிப்புகள்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானவை

தன்னிறைவு பதிப்பு 3.0 என்று அடுத்தச் சுற்று ஏமாற்று அறிவிப்புகள் தந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். முதல் இரண்டு பதிப்புகளால் பொருளாதாரம் மீளவில்லை. சாமான்யர் வாழ்வும் மாறவில்லை. முதலாளிகளின் கருவூலங்கள் நிறைந்தன.

 ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்திய புரட்சிக்கு தயாராவோம்' 

தொகுப்பு: ராஜேஷ்


மகத்தான ரஷ்யப் புரட்சி உருப்பெற்றது பற்றிய, 70 ஆண்டு கால மக்களுக்கான சோவியத் ரஷ்யாவின் ஆட்சி பற்றிய செய்திகளை, 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் நோக்கி பயணிக்கவுள்ள புதிய தலைமுறையினரிடம் சேர்க்க,

 பன்னாட்டு இந்நாட்டு நிறுவன தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் 

மேக்னா தொழிலாளர்களின் போராட்டம்

- ராஜேஷ்


கொரோனாவை காரணம் காட்டி ஜனநாயகத்தை மதிக்காமல், நாடாளுமன்ற மாண்புகளை குழி தோண்டி புதைத்து தொழிலாளர் விரோத, விவசாய விரோத, மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவது என பிரதமர் மோடி

Saturday, September 5, 2020

 தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கனவு நனவாகுமா?


விருப்பப்படுகிற உரிமையை, முட்டாள்களின் கற்பனை சொர்க்கத்தில் வாழும் உரிமையை பாரதிய ஜனதா கட்சிக்கு எவராவது மறுக்க முடியுமா?

பிரசாந்த் பூஷணை தண்டிப்பது
கருத்துரிமையை, நீதித்துறை சுதந்திரத்தை,
ஜனநாயகத்தை தண்டிப்பதாகும்

எஸ்.குமாரசாமி 


பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்தார் என ஆகஸ்ட் 14 அன்று முடிவுக்கு வந்த நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வம், ஆகஸ்ட் 20, 24, 25 விசாரணை நாட்களில் தண்டனை பற்றி முடிவெடுக்காமல், நாள் குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. அவருக்கு எதிரான வேறு ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வேறு ஓர் அமர்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதி அருண் மிஷ்ரா செப்டம்பர் 2, 2020ல் ஓய்வு பெறுகிறார்.

கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றும்


எஸ்.குமாரசாமி


பகத்சிங்கிற்கு கம்யூனிசத்தில் நம்பிக்கை இருந்தது. அவர் தேசபக்தர். நாட்டு விடுதலைக்காகப் போராடியதற்காகதான், தூக்கில் ஏற்றப்பட்டார். புன்னபுரா வயலாறு, தெபாகா, தெலுங்கானா, நக்சல்பாரி போராளிகள் தேச பக்தர்கள். கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி நாட்டுப்பற்று, ஏகாதிபத்திய எதிர்ப்பும் மக்கள்  சார்பும் கொண்டதாகும்.

இந்து ராஷ்டிரா நோக்கிய பயணம்
தடுக்க முடியாததா?


எஸ்.குமாரசாமி


பட்டப்பகலில் நாடறிய பாப்ரி மசூதியை இடித்தவர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படாத பின்னணியில், பாப்ரி மசூதியை இடித்தது கொடும் குற்றம் ஆனாலும் இடித்த தரப்புக்கே கோவில் கட்ட மசூதி இருந்த இடம் தரப்படும் என்று உச்சநீதிமன்றம் வெகுமதியாய் தந்த பின்னணியில், காஷ்மீர் என்ற இசுலாமிய சிறுபான்மையினர் பெரும்பான்மையாய் இருந்த ஒரே மாநிலம் துண்டாடப்பட்ட அதே ஆகஸ்ட் 5 அன்று, இந்தியப் பிரதமர், இந்து பிரதமராய் போய் கோவில் கட்ட அடிக்கல் நாட்டிய பிறகு, இந்து ராஷ்டிரா பயணத்தை இனி எவராலும் தடுக்க முடியாது என இந்துத்துவர்கள் சொல்கிறார்கள்.

சங் பரிவார், ஜியோ, பேஸ்புக்
நச்சுக் கலவையையும் முறியடிப்போம்!


முதலாளித்துவம் தனது லாப விகிதத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தை புகுத்தும் என்றால், அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாட்டாளி வர்க்கம் தனது அறுதியிடலையும் அறிவிக்கும்.

 பேஸ்புக்கில் பேஸ்புக்குக்கு நடந்த 'சம்பவம்'


(ஊடகவியலாளர், சமூக செயல்பாட்டாளர் கவின்மலர் முகநூல் பதிவு, 17.08.2020)


என்ன நடந்ததென்று எழுதி விடுகிறேன். முகநூலில் என் படத்தின்மீது 'என் விலை 1000 ரூபாய்' என எழுதி சசிகுமார் என்கிற நபர் என் படத்தை போட்டோ கமெண்ட்டாக பா.ஜ.க.வினரின் திடீர் முருக வழிபாடு குறித்து எழுதிய என் பதிவில் போட்டிருந்தார்.

 கல்வி  உரிமையை மறுக்கும்
தேசிய கல்வி கொள்கை 2020

ஆர்.வித்யாசாகர்


புதிய 'தேசிய கல்வி கொள்கையை' திணிப்பதன் மூலம், வகுப்புவாத பாசிச பாஜக  சாதி ஆதிக்க மனுவாத பார்ப்பனீய சமூகத்தை மீண்டும் கட்டமைப்பதற்கு வித்திட்டுள்ளது. வேடுவனாகிய ஏகலைவன் எப்படி வில் வித்தை கற்கலாம் என்று அவனுடைய பெருவிரலை குரு காணிக்கையாகப் பெற்றதாக   மஹாபாரத புராணம் நமக்கு கூறுகிறது.

Tuesday, August 4, 2020

இடஒதுக்கீடு சலுகை அல்ல
தமிழக மக்கள் போராடிப் பெற்ற உரிமை

ஊரடங்கு இருக்கிறது, ஆனால் ஊரடங்கு இல்லை. டாஸ்மாக் திறந்த நாள் முதல் இதுதான் கிட்டத்தட்ட எங்கும் நிலைமை. முதலமைச்சர் பழனிச்சாமி திக்குத்தெரியாத காட்டில் சிக்கியவர்போல் இலக்கற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
ஆகஸ்ட் 15ல் அனைவரும் முழங்குவோம்
சுதந்திரம் வேண்டும்! நீதி வேண்டும்!
ஜனநாயகம் வேண்டும்!

எஸ்.குமாரசாமி

நமது அன்பிற்குரிய தாய்நாடு, வெள்ளையரிடம் இருந்து சுதந்திரம் பெற்று இந்த ஆகஸ்ட் 15 2020ல் 73 ஆண்டுகள் முடிந்து விட்டன. நாடு கொரோனாவிடம் இருந்தும் கார்ப்பரேட் கொள்ளையரிடம் இருந்தும் சுதந்திரம் அடையவில்லை
பாஜகவினால் தொடங்கப்படும் ஊழிக்காலம்
சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020

ஆர்.ஆர்.சீனிவாசன்

வளர்ச்சி, சுதேசி, தேசபக்தி, இறையாளுமை, தேசப்பாதுகாப்பு, மூலோபாயத் திட்டம் போன்ற சொற்கள் இன்று பாஜகவினால் சூழலியல் அழிவுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. அல்லது பயன்படுத்தப்பட ஆரம்பித்துவிட்டது.
பறிபோகும் மாநில உரிமைகளும்
மோடியின் விவசாய சீரழிவுக் கொள்கைகளும்

ஆர்.வித்யாசாகர்

சேகர், தர்மபுரி மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாயம் செய்கிறார். சுமார் ரூ.4 லட்சம் செலவு செய்து 1000 அடி ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்கிறார்.
கடல் பறவைகளான
புலம் பெயர் தொழிலாளர்கள்

ஆர்.வித்யாசாகர்

துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டு  நின்று கொண்டிருந்த ஒரு பெரிய கப்பலில் பசியோடிருந்த ஒரு பறவை அங்கு இறைந்து கிடந்த தானியங்களை கொத்திக் தின்று கொண்டிருந்தது.
தோழர் நாகராஜன் மறைவுக்கு
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது

28.07.2020 அன்று தோழர் நாகராஜன் மறைந்தார்.  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது தொழிற்சங்கம் செங்கொடி தாழ்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
தோழர் நாகராஜன் இண்டோடெக் ட்ரான்ஸ்பார்மர் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். சிஅய்டியுவிலிருந்து வெளியேறி 1995 காலகட்டத்தில் நம்மோடு இணைந்தார். எல்லா போராட்ங்களிலும் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சியை உறுதியாக நேசித்தார். அரசியலை நன்றாக உள்வாங்கிக் கொண்டார்.
விருதுநகரைச் சேர்ந்த தோழர் நாகராஜன் தனது 64 ஆவது வயதில் கொரோனா நோய் பாதிப்பால் இறந்தார்.
சிறந்த, முக்கியமான தோழரை இழந்தது கட்சிக்கும். சங்கத்திற்கும் பேரிழப்பே. அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் கிருஷ்ணதாஸ் மறைவுக்கு
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் உள்ள, சான்மினா தொழிற்சாலையில் கிருஷ்ண தாஸ் என்ற தொழிலாளி கொரானா நோய் தொற்று காரணமாக இன்று (27.07.2020) உயிரிழந்தார். உழைப்போர் உரிமை இயக்கத்துடன் இணைக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினரான தோழர் கிருஷ்ண தாஸ் இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டார். அவரது மறைவு சங்கத்துக்கு இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தி னருக்கு எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது.
(அய்க்கிய அமெரிக்க நிறுவனமான சான்மினாவில் 20 மேற்பட்ட தொழிலாளர்கள் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 மேற்பட்ட தொழிலாளர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலை இயங்குகிறது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை).

தோழர் ராஜா மறைவுக்கு
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது

எல்டியுசி வழிகாட்டுதலில் இயங்கும் டாஸ்மாக் விற்பனை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ராஜா கொரோனா தொற்றால் 20.07.2020 அன்று மரணமுற்றார். அவரது மறைவு சங்கத்துக்கு பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எல்டியுசி ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது.
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தோழர் ராஜா குடும்பத்துக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்திய சீன எல்லைப் பிரச்சனை
போர் வேண்டாம், அமைதி வேண்டும்

உமாமகேஸ்வரன்

சீனத்தையும் இந்தியாவையும் பிரிக்கும் உண்மையான எல்லைக்கோடு (LAC) மிகவும் சிக்கலான வரையறைக்குட்பட்டது.
மத்திய மாநில அரசுகளை கண்டித்து
ஜுலை 3 நாடு தழுவிய போராட்டம்

தொழிலாளர் சட்டங்களை முற்றாக நீக்கும், நான்கு தொகுப்புகளாக சுருக்கும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்,
அமைப்புசாரா தொழிலாளர்
கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அமைப்புசாரா தொழிலா ளர் கூட்டமைப்பு சார்பில்  அமைப்புசாரா தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்று கஞ்சி பானையுடன் 22.07.2020 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உழைப்போர் உரிமை இயக்கத் தின் மாநிலத் துணைத் தலை வர் தோழர் ஜி.முனுசாமி, தோழர்கள் ராஜேந்திரன், லூயிஸ், சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிவாரணப் பணிகள்

திருபெரும்புதூர் டோல்கேட் அருகில் உள்ள அம்சக் கிரேன்ஸ் தொழிற் சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்டு, ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தோழர் ஜாக்கப் பன்னீர் அவர்களுக்கு இடது தொழிற்சங்க மய்யம் சார்பாக 03.07.2020 அன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சான்மினா தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 6 தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சான்மினா தோழர்கள் (தியாகராஜன், ரமேஷ், ரஹீம், சைமன், வெங்கடேசன், குருநாத், கோலப்பன், பாலமுருகன், ரவி) மளிகை பொருட்களை தந்து உதவி செய்தனர்.
 கொரட்டூர் லஷ்மி ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு.சந்திரசேகர் 200 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை  வழங்கினார்.

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும்!

மக்களுக்கான மாணவர்களின்
மாநிலம் தழுவிய போராட்டம்

நோய் தொற்று, குடும்ப வறுமை, மன உளைச்சல், கொரோனா பரவும் அபாய சூழ்நிலை என்ற நிலைமைகளில் நாட்டில் உள்ள பல்கலை கழகங்கள் தேர்வுகள் நடத்துவது மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாகவே இருக்கும் என்பதால்,
காயார் காவல்துறையை
கண்டிக்கின்றோம்

கொரானா காலத்தில் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தியும், சாத்தான்குளம் இரட்டைபடுகொலைக்கு நீதி கேட்டும், சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் மக்களுக்கான இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தது.
சிலைகளை சேதப்படுத்தலாம்
சித்தாந்தத்தை அழிக்க முடியாது

பெரியார் சிலை அவமதிப்பை கண்டிக்கிறோம்!

தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் விதமாகவும், அசாதரண சூழலை உருவாக்கும் விதமாகவும், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றன.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும்
திறக்கப்பட வேண்டும்

தமிழக வழக்கறிஞர்கள் நலன் காக்க  சென்னை உயர்நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களும் திறக்கப்பட வலியுறுத்தி ஜுலை 24 அன்று ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பின்வரும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன:
தமிழக மக்களுக்காக, வழக்கறிஞர்களுக்காக
தொடர்ந்து குரல் எழுப்பும்
ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர்
தோழர் கு.பாரதி வீட்டின் முன்பு
காவல் துறையினர் குவிந்து அச்சுறுத்தல்!
கண்டிக்கின்றோம்!

கொரானா காலத்தில் தமிழக வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் கோருதல்,ம் நீதிமன்றங்கள் திறக்க  கோருதல், வறிய மக்களுக்கு நிவாரணம் கோருதல், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோர் நலன்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவது என செயல்பட்டு வரும்

Sunday, June 28, 2020

கம்யூனிஸ்ட், ஜுலை 2020
தலையங்கம்


மக்கள் வாழ்வும் மாநில உரிமைகளும் பறிபோகும்போது
இறைவனிடம் கையேந்தும் முதலமைச்சர்


ரோம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்து நாம் பார்த்ததில்லை.
கொரோனா கால நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடை பாதை வியாபாரிகள் மற்றும் சிறுகடை வியாபாரிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.10,000 கடன் வழங்க வேண்டும் என்று கேட்டு திருபெரும் புதூர் இந்தியன் வங்கியில் பகுதியின் சிறுகடை வியாபாரிகள் ஜுன் 18 அன்று விண்ணப்பித்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி, திருபெரும்புதூர் பகுதியின் தோழர் சண்முகம் உடனிருந்தார்.
நூறாண்டுகளுக்கு முன் வந்த பெருந்தொற்று...
போர் மற்றும் போராட்டங்கள்


எஸ்.குமாரசாமி

கொரோனா வைரஸ் நோயை கோவிட்-19 என அழைக்கிறோம். 2019ல் தோன்றிய நோய், 2020ல் நீடிக்கிறது.
உடுமலை சங்கர் சாதியாதிக்கப் படுகொலையில் நீதி வேண்டும்

கொரோனா காலத்தில் நடந்துள்ள
சாதியாதிக்க, ஆணாதிக்க, காவல்துறை வன்முறைகள் பற்றி
தமிழக அரசு வெள்ளையறிக்கை  வெளியிட வேண்டும்


உடுமலை சங்கர் சாதியாதிக்கப் படுகொலையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
'என்னால் மூச்சு விட முடியவில்லை'

ஆர்.வித்யாசாகர்


'எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
பெட்ரோலும் டீசலும்
மோடி அரசுக்கு பொன் முட்டையிடும் வாத்து  

மக்களுக்கோ அது பெருந்துயரம்

உமாமகேஸ்வரன்

ஜுன் 7 தொடங்கி தொடர்ந்து 15 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பெட்ரோல் ரூ.7.62, டீசல் ரூ.8.28 உயர்ந்துள்ளது.
போகவிடும்படி
சுங்கச்சாவடியில்
ஒருவன் ஒரு போலீஸ்காரன்
காலில் விழுகிறான்

செக்போஸ்டுகள் முன்
முள்வேலியிட்ட முகாம்களில் நிற்பதுபோல
பரிதவித்து நிற்கிறார்கள்

காத்திருக்கும்
தடுக்கப்பட்ட வரிசையில்
'அம்மா எப்போது ஊருக்குப்போவோம்?'என
அழும் குழந்தையை
அறைகிறாள் அம்மா

எதை எடுத்துக்கொள்வது
எதை விட்டுவிட்டு வருவது
என குழப்பத்தினூடே
எடுத்துக்கொண்டவற்றின் சுமை
அனைவரையும் அழுத்துகிறது

இப்போது நிறைய நாடுகள்
திடீரென உருவாகிவிட்டன
நிறைய புதிய எல்லைக்கோடுகள்
நிறைய இனங்கள்
நோய்மையுள்ள இனங்கள்
நோய்மையற்ற இனங்கள்
நிறைய அகதிகள்
சோதிக்கப்படும் அனுமதிச்சீட்டுகள்
போலி அனுமதிச்சீட்டுகள்
போலி பாஸ்போர்டுகள்
திருப்பி அனுப்படுகிறவர்கள் வரிசை
நீண்டுகொண்டே செல்கிறது

என் ஊருக்குத்தானே போகிறேன் என்ற
எளிய மனிதனினின்
எளிய நியாயம்
எந்தக் கதவையும் திறக்கவில்லை

அனுமதிக்கப்படாமல்
நிராசையுடன் திரும்புகிறவர்களின் முகங்கள்
சவக்குழிக்கு
திரும்புகிறவர்களின் முகங்கள்போல
கறுத்துவிட்டிருக்கின்றன

அனுமதிக்கப்பட்டு
எல்லைதாண்டிபோகிறவர்கள்
எப்போது திரும்புவோம் என
தங்கள் நகரத்தை கண்ணீருடன்
திரும்பிப்பார்க்கிறார்கள்

பூட்டப்பட்ட வீடுகள்
பாழடைகின்றன
பிசாசுகள் மெல்ல
குடியேறுகின்றன
19.6.2020, இரவு 11.08
மனுஷ்ய புத்திரன்
கொரட்டூர் பால்பண்ணை அருகில் முகுந்த் கிளோத்திங் ஆலையில் 4 முதல் 5 வருடங்கள் வரை சுமார் 80 பெண் தொழிலாளர்கள் ஆயத்த ஆடை உற்பத்தியில் வேலை செய்கின்றனர். தையல்காரர் ரூ.9,000, செக்கர், ஹெல்பர், கட்டர், டிரிம்மர் ஆகியோர் ரூ.6,000 முதல் ரூ.7,000 என சம் பளம் பெறுகின்றனர். வேலைக்கு நியமனம் செய்தபோது, போக்குவரத்துக்கு நிறுவன வாகனம் உண்டு என்று சொன்ன நிர்வாகம், சம்பளத்தில் வாகன வாடகை என ரூ.1,000 பிடித்தம் செய்கிறது. தற்போது 3 மாதங்களாக ஊரடங்கால் வேலையும் இல்லை. மார்ச் முதல் ஜுன் வரை சம்பளமும் கொடுக்கப்படவில்லை. ஆட்குறைப்பு செய்யப் போவதாகவும் தொழிலாளர்கள் தாங்களே முன்வந்து வேலையை ராஜினமா செய்ய வேண்டுமென நெருக்கடி தருவதாகவும் தொழிலாளர்கள் சொல்கின்றனர்.
பணிப் பாதுகாப்பு, மேலான வேலை நிலைமைகள் ஆகியவற்றை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் சுரேஷ், எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் மோகன் ஆகியோருடன்  ஜுன் 3 அன்று ஆலை வாயிலில் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.
கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய 
மாநில அலுவலகம் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சுமார் ரூ.3500 கோடி இருப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,
மெட்ராஸ் கிளப் தொழிலாளி
தோழர் சீனிவாசன் மறைந்ததையொட்டி
அவரது குடும்பத்தாருக்கு,
எல்டியுசி சார்பாக ரூ.10,000,
பெனிவெலன்ட் ஃபண்ட்டில் இருந்து ரூ.10,000 மற்றும்
மெட்ராஸ் போட் கிளப்பில் பணிபுரியும் தோழர்கள் சார்பாக
ஒருநாள் சம்பளமும் வழங்கப்பட்டது.
ஜு ன் 15 அன்று நடந்த
இரங்கல் கூட்டத்தில்
தோழர் சீனிவாசனின் குடும்பத்தார் கலந்துகொண்டனர்.
மலேரியா ஒழிப்பு தொழிலாளர் போராட்டம்

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7ஆவது மண்டலத்தில் மலேரியா நோய் ஒழிப்பு தொழிலாளர்கள் சுமார் 200 பேர் ஜுன் 9 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.
தமிழக வழக்கறிஞர்கள் நலன் காக்க
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் போராட்டம்


வழக்கறிஞர்கள், நீதித் துறையின் முக்கிய அங்கம். மக்கள் நீதி பெற பணி செய்பவர்கள் வழக்கறிஞர்களே. எனவே வழக்கறிஞர்களை காப்பதும் அரசின் கடமை.
தொழிலாளர் ஆணையரிடம் நியாயம் கேட்டு போராட்டம்

கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழுக் கூட்டம் அம்பத்தூரில் உள்ள பொத்தூரில் 05.06.2020 அன்று மாலை 5 மணியளவில் அலுவலகத்தில் நடைபெற்றது.

Tuesday, May 19, 2020

தோழர் எஸ்.கோவிந்தராஜு அவர்களுக்கு செவ்வஞ்சலி

நமது தோழர் எஸ்.கோவிந்தராஜு மே 5 அன்று அதிகாலை கோவையில் மறைந்தார். அவருக்கு வயது 77.
தோழர் மல்லிகா துவக்கம் முதல் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் முன்னணி பங்கு வகித்துள்ளார். அதற்காக வேலை நீக்கத்தில் இருந்து கொலை வழக்கு வரை சந்தித்துள்ளார்.
அவரது இணையர் தோழர் கோவிந்தராஜு  மே 5 அன்று காலமானார்.
தோழர் மல்லிகா, அவரது குடும்பத்தினரும் இருந்தபோது, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்க நிர்வாகிகளை மே 16 அன்று அழைத்து ஆயுள் சிறைவாசத்தில் இருக்கும் பிரிக்கால் தோழர்களின் பிள்ளைகள் கல்விச் செலவுக்காக ரூ.37,000 வழங்கினார்.
தமிழக அரசு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது 
தமிழக மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்

நான்காம் கட்டமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிக்கிறது. முதலமைச்சர்களுடன் மோடி நடத்திய கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துச் கொண்டே செல்வதால்  தமிழக முதலமைச்சரும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறகு எதற்கு இந்த டாஸ்மாக் திறப்பு?
வேலை நேரத்தை அதிகரிப்பதன்
விளைவுகள் என்ன?


எஸ்கே

கூடுதல் நேரம் வேலை பார்த்து அதே சம்பளம் வாங்கும்போது, அது உண்மையில் சம்பளக் குறைப்பாகும்.
மோசடி அறிவிப்புகளுக்கு எதிரான
மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான
மே 22 எதிர்ப்பு நாள் வெல்லட்டும்


எஸ்.குமாரசாமி


கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாட்டு மக்கள் துன்பத்தின் அடியாழத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, மோடி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி மீட்புத் திட்டம், ஊக்கத் திட்டம் என்று ஒன்றை அறிவித்தார்.
கொரோனாவுக்கு எதிரான போர் என்ற பெயரில்
இந்தியத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்


இன்னும் போ, இன்னும் போ என்று, லாபம் மூலதனத்தின் காதுகளில் சொல்லிக் கொண்டே இருக்குமாம். லாபம், பெரும்லாபம், இன்னும் பெரும்லாபம்.
புலம்பெயர் தொழிலாளர்களின்
கண்ணீர் வழித்தடங்கள்

 
ஆர்.வித்யாசாகர்
 
கடந்த நூறாண்டுகால வரலாறு காணாத மானுட துயரம் இந்தியாவில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முயற்சிக்கும் வேளையில் அவர்கள் படும் பெரும் துயரங்கள் நாளேடுகளிலும், தொலைக்காட்சியிலும் அன்றாட நிகழ்வாக காட்டப்படுகின்றன.

Tuesday, May 12, 2020

பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்

நூலில் இருந்து மேலும் சில விவரங்கள்

ஏ.ஜி.நூரானி

பகத்சிங் பிறப்பு

பஞ்சாப் மக்களின் ஒரு பெரிய பகுதியினரின் மனங்களில் கலக உணர்வு இருந்த சூழலில் புரட்சியாளர்களின் ஒரு குடும்பத்தில் செப்டம்பர் 27, 1907ல் லயால்பூரின் பங்கா கிராமத்தில் வித்யாவதியின் மகனாக பகத்சிங் பிறந்தார்.

Saturday, May 9, 2020

பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்

மத்திய சட்ட அவையில் ஜின்னா உரை

ஏ.ஜி.நூரானி

(பகத்சிங் மற்றும் பகத்சிங்கின் தோழர்கள் மீதான வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, சிறையில் அரசியல் சிறைவாசிகள் போல் கவுரவமாக நடத்தப்பட வேண்டும், விசாரணையின் போது, கை விலங்குகள் போடக் கூடாது என அவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

Friday, May 8, 2020

பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்

வழக்குக்கு ஆதாரமான புகார்

ஏ.ஜி.நூரானி

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, சிறப்பு நீதிபதி ஆர்.எஸ்.பன்டிட் ஸ்ரீகிஷன் நீதிமன்றத்தில், காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஹேமில்டன் ஹேரிங்டன் தாக்கல் செய்த புகார் பின்வருமாறு:

Thursday, May 7, 2020

பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்

பகத்சிங் என்ற மனிதனும் பகத்சிங் என்ற நிகழ்வும்

ஏ.ஜி.நூரானி

‘மனிதர்களின் செயல்களுக்கு அவர்களை உந்தித் தள்ளிய காரணங்கள் என்ன என்று அறிய முயற்சிக்காமலே, அவர்களையோ அவர்கள் செயல்களையோ கண்டனம் செய்வது மிகவும் சுலபமானது, மிகவும் அற்பமானது.
மோடி மவுனம் கலைக்க வேண்டும்

வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் மோடி இப்போது அதிகமாக வாய் திறப்பதில்லை. அமித் ஷாவின் சத்தமும் கிட்டத்தட்ட கேட்பதில்லை.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்

இந்தியாவின் உழைக்கும் மக்கள், நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் என தமது ஊரை, வீட்டை விட்டு பிரிந்து சென்றுதான் பிழைக்கிறார்கள். 200 நாடுகளில் ஒரு கோடியே முப்பது லட்சம் இந்தியர்கள் சென்று பிழைப்பதாகவும் இவர்கள் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வரை அனுப்பியதாகவும் விவரங்கள் சொல்கின்றன.
எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் ஆதாயம் என்று செயல்படும்
சமூக விரோத முதலாளிகள்

கொரோனா கொடூரமான முதலாளிகளுக்கு ஒரு வரமாகும். கோவை கொடூரர்கள் துவங்கி மாநிலம் எங்கும் நாடெங்கும் எட்டு மணி நேர வேலையை ஒழித்துக் கட்ட முயற்சி செய்கிறார்கள். 
தமிழக அரசு டாஸ்மாக் சாராயக் கடைகளை திறக்கக் கூடாது

அரசு எப்போதும் தனிமனித இடைவெளி பற்றி வலியுறுத்துகிறது. ஆனால், வருவாய் வேண்டும் என்பதற்காக வருமானமே இல்லாத மக்களிடம் இருந்து வீட்டில் இருக்கிற நகை, பொருட்கள் எதை வேண்டுமானாலும் விற்றோ, அடகு வைத்தோ கடன் வாங்கியோ பணம் கொண்டு வந்து சாராயம் வாங்கு எனச் சொல்லி கோடிக்கணக்கில் பறிப்பது எப்படி நியாயமாகும்?

Tuesday, May 5, 2020

05 மே 2020

எஸ்.குமாரசாமி
கம்யூனிஸ்ட் கட்சி
இடது தொழிற்சங்க மய்யம்

தோழர் எஸ்.கோவிந்தராஜு அவர்களுக்கு செவ்வஞ்சலி
 
 

நமது தோழர் எஸ்.கோவிந்தராஜு மே 5 அன்று அதிகாலை கோவையில் மறைந்தார். அவருக்கு வயது 77.

Monday, May 4, 2020

பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்
ஏ.ஜி.நூரானி

‘பகத்சிங் வழக்கு விசாரணை: நீதியின் அரசியல்’ என்ற ஏ.ஜி.நூரானி எழுதி 1996ல் வெளியிடப்பட்ட நூலில் இருந்து,
முன்னுரை
பகத்சிங் என்ற மனிதனும் பகத்சிங் என்ற நிகழ்வுப்போக்கும்
வழக்குக்கு ஆதாரமான புகார்
மத்திய சட்ட அவையில் ஜின்னா உரை
பகத்சிங்கின் இறுதி மனு
நீதி விசாரணை விவரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்
ஆகிய பகுதிகளை அடுத்தடுத்து தமிழில் தர உள்ளோம். முதல் பகுதியாக நூலாசிரியரின் முன்னுரை தரப்படுகிறது.
உயிர் வாழும் உரிமையை மறந்துவிடுமாறு
எவரும் சொல்ல முடியாது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா காலத்தில் நீதித்துறை சுதந்திரத்துக்கு ஆபத்து என பேட்டி கொடுத்த நான்கு நீதிபதிகளில் ஒருவர் மதன் பி.லோகுர்.
கொரோனா கால மே நாளில்
மேக்னா தொழிலாளர்களுக்கு

எல்டியுசிக்கு ஒரு வெற்றி

ஒரகடத்தில் உள்ள கனடா நாட்டு பன்னாட்டு நிறுவனமான மேக்னா, தான் விரும்பாத சங்கம் வைத்த எல்டியுசி சங்க உறுப்பினர்கள் 55 பேருக்கு ஏப்ரல் 2020 சம்பளம் தரவில்லை.

Wednesday, April 29, 2020

கொரோனாவும் புலம்பெயர் தொழிலாளர்களும்

ஆர்.வித்யாசாகர்

கொரோனாவால்  இந்தியாவில் முதன்முறையாக புலம் பெயர் தொழிலாளர்களின் அவல நிலை அரசியல் பரப்புரைகளின் மய்யத்திற்கு வந்திருக்கிறது. 
22.04.2020 லெனின் 150ஆவது ஆண்டு பிறந்த தினம்

நாம் கனவு காண வேண்டும்

‘நாம் கனவு காண வேண்டும்’ என்று எழுதினேன், எழுதிவிட்டு பயந்து போனேன். நான் ஓர் ‘ஒற்றுமை மாநாட்டில்’ உட்கார்ந்திருப்பது போலவும் எதிரே ரபோச்சியே தேலோ ஆசிரியர்களும் கட்டுரையாளர்களும் உட்கார்ந்திருப்பது போலவும் கற்பனை செய்தேன். தோழர் மார்தீனவ் எழுந்து என் பக்கம் திரும்பி கடுங்கண்டிப்புடன் ‘கட்சி கமிட்டிகளின் கருத்தை  முதலில்  கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் சுயேச்சையுள்ள ஓர் ஆசிரியர் குழுவுக்குக் கனவு காண உரிமையுண்டா?’ என்று சொல்கிறார். அவரைத் தொடர்ந்து தோழர் கிரிச்சேவ்ஸ்கி வருகிறார். (வெகு காலத்திற்கு முன்பே தோழர் பிளெஹானவை விட ஆழமாகப் பார்த்த தோழர் மார்தீனவை மெய்யறிவு விசயத்தில் மிஞ்சி ஆழமாகப் பார்க்கும்) இவர் மேலும் கடுங்கண்டிப்புடன் ‘நான் இன்னும் மேலே போய் கேட்கிறேன்: மார்க்சின் கருத்துப்படி தன்னால் நிறைவேற்றக்கூடிய பணிகளைத்தான் எப்போதும் மனிதகுலம்  எடுத்துக் கொள்கிறது என்பதை அறிந்திருந்தும், கட்சியோடு கூடவே வளர்கிற கட்சிப் பணிகளின் வளர்ச்சியை சேர்ந்த நிகழ்வுப்போக்குதான் போர்த்தந்திரம் என்பதையும் அறிந்திருந்தும் ஒரு மார்க்சியவாதிக்குக் கனவு உரிமையுண்டா?’ என்கிறார்.
இந்தக் கடுங்கண்டிப்புள்ள கேள்விகளை நினைத்துப் பார்த்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது, எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. நான் பீசரெவிடம் தஞ்சம் புகலாம் என்று நினைக்கிறேன்.
கனவுகளுக்கும், எதார்த்தத்துக்குமுள்ள வேற்றுமை பற்றி பீசரெவ் எழுதியதாவது: ‘வேற்றுமைகளில் பலவகை உண்டு. நிகழ்ச்சிகளின் இயல்பான தடையைத் தாண்டி என் கனவு முன்னே ஓடக்கூடும். அல்லது நிகழ்ச்சிகளின் எந்த இயல்பான நடையும் என்றைக்கும் போகாத ஒரு திசையில் அது பாய்தோடலாம். முதலில் சொன்ன வழக்கில் என் கனவு தீங்கெதுவும் செய்யாது. அது தொழிலாளியின் ஆற்றலை ஆதரித்து அதிகப்படுத்தவும் கூடும்... உழைப்பு சக்தியை உருக்குலைக்கவோ முடமாக்கவோ செய்கிற வகையில் இக்கனவுகளில் ஏதுமில்லை. மாறாக இவ்வடிவில் கனவு காணும் திறமை மனிதனிடமிருந்து முற்றாகப் பறிக்கப்பட்டால், தன் கைகள் உருவங்கொடுக்கத் தொடங்கியிருக்கும் பொருளைப் பற்றி மனிதன் அவ்வப்பொழுது முன்னே ஓடி ஒரு முழுமையான முடிவுற்ற சித்திரத்தை மனதில் உருவாக்கிக் கொள்ள முடியாமற்போனால், அவன் கலைத் துறையிலோ விஞ்ஞானத் துறையிலோ நடைமுறை செயல்துறையிலோ விரிவான, கடுமையான பணியை மேற்கொள்ளும் படி செய்யக்கூடிய தூண்டுகோல் வேறெது என்று என்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை... கனவு காண்பவர் காரியப்பற்றோடு தன் கனவை நம்பினால் போதும், வாழ்க்கையை அவர் உன்னிப்புடன் கவனித்துத் தன் ஆகாயக் கோட்டைகளுடன் தன் கூர்நோக்குகளை ஒப்பிட்டுப் பார்த்து, பொதுவாகவே தன் கற்பனைகளை ஸ்தாபித்துக் கொள்ள உண்மையாக உழைத்தால் போதும், கனவுக்கும் எதார்த்தத்திற்குமுள்ள வேற்றுமையினால் எந்தத் தீங்கும் விளையாது. கனவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே கொஞ்சம் தொடர்பிருந்தால் எல்லாம் சரி’.
துரதிருஷ்டவசமாக, இப்படிக் கனவு காண்பது நம் இயக்கத்தில் அரிதாகவே உள்ளது. நிதானப் புத்தியுள்ள கருத்துகள் உள்ளவரென்றும் ‘ஸ்தூலமான அம்சத்தோடு’ நெருக்கமான பிணைப்புள்ளவரென்றும் பெருமையடித்துக் கொள்கிறவர்கள்தான், சட்டபூர்வமான விமர்சனத்திற்கும் சட்டவிரோதமான வால்பிடிக்கும் போக்குக்கும் பிரதிநிதிகளாக இருப்பவர்கள்தான் இதற்குப் பெரிதும் பொறுப்பாளிகளாவர்.

- லெனின், என்ன செய்ய வேண்டும்?
உரிமை பறிப்பு, ஊதிய வெட்டு, ஊழல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு
நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்


2020 மே மாத கம்யூனிஸ்ட் இதழும் அச்சுக்கு செல்ல முடியவில்லை. ஊரடங்கு தொடர்கிறது. சாமான்ய மக்களின் துன்பங்கள் தொடர்கின்றன. தீவிரமடைகின்றன. அவற்றுக்கு தீர்வு காண முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறுகின்றன. ஆயினும் இந்த நெருக்கடி நிலைமைகளிலும் மதவெறி, ஊழல் நடவடிக்கைகளில் உற்சாகமாக தொய்வின்றி ஈடுபடுகின்றன.
தொற்று நோய் எதிர் தப்பெண்ணம்

கவனி, விடுபடு
நான் எந்தவித அடையாளப்படுத்தலையும்
ஏற்க மறுக்கிறேன்.
இதை ஏற்றுக்கொள்கிற மாதிரி நான் ஏதும் செய்யவில்லை
பின் ஏன் என்னுடைய மேசையின்மீது
நீ இந்த வெறுப்பை  பரிமாறுகிறாய்
நான் உங்கள் நம்பிக்கையையோ அல்லது மதத்தையோ
பரிகாசம் செய்யவுமில்லை.
உங்கள் கீழ்ப்படிதலைக் கேலி செய்யவுமில்லை
உங்கள் அறியாமையால்
உங்களுக்கு தெரியாத சில
எளிமையான கேள்விகளைக் கேட்கிறேன்.
சொல்லுங்கள், எங்கிருந்து துவங்குவது ?
முதலும் இறுதியுமாக நாம் இதைச் செய்வோம்.
நட்பு எனும் திரைச்சீலை விழட்டும்
நீங்கள் எதை மறைக்கிறீர்கள் என்று காட்டுங்கள் எனக்கு.
நீங்கள் மறைமுகமாக பொதுமைப்படுத்துவது
என்னுடைய பெயர் காரணமாகவா
நாம் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்று எனக்குத் தெரியும்
இருப்பினும் ஒரு இந்தியனாக அதை அங்கீகரிக்கிறேன்.
இந்த கோமாளித்தனத்தைக் கடைபிடிக்கும்
உங்களைக் கண்டு நான் பரிதாபம்  கொள்கிறேன்.
நீங்கள்தான் இந்தத் தடையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
உங்கள் வார்த்தைகள் மதவெறுப்பில் தோய்த்தெடுத்தவை
தூரத்திலிருந்தே என்னால் நுகர முடிகிறது.
உங்களின் போலி தேசபக்தி கொண்டு
எனது வாயை அடைக்கப் பார்க்காதீர்கள்
உங்களுக்குத் தெரியும் நீங்கள் யாரென்று
நீங்களும் ஒரு காலத்தில்,
பன்மைத்துவத்தை கடைப்பிடிக்க முயற்சித்தவர்கள்தானே.
சட்டத்தை மீறுபவர்களுடன் நான்
என்னை அடையாளப்படுத்திக்கொண்டதுமில்லை
நான் என்னுடைய கோழையை (எச்சில்)
யார் மீதும் துப்பியதுமில்லை. அல்லது யாரையும்
நிர்வாணப்படுத்தியதுமில்லை.
நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றேன்.
நாம் ஒரு விஷயத்தை நேரிடையாகவே ஒத்துக்கொள்வோம்.
நாம் ஒரு பெரும் தொற்றுநோய்க்கெதிராக
போராடிக் கொண்டிருக்கிறோம்.
எனவே, வெறுப்பைத் தள்ளி வைப்போம்.
நமக்குத் தேவை அத்தியாவசியமானவைகள்,
ஏமாற்றுத் தந்திரங்கள் அல்ல.

சரின் கான்
(டெல்லியைச் சார்ந்த ஒரு சுதந்திரமான எழுத்தாளர், கலைப்பட விமர்சகர்.
தமிழில் இல.உமாமகேஸ்வரன்)
கொரோனா காலத்தில் நாட்டு மக்களைக் காக்க
ரூ.20 லட்சம் கோடி வேண்டும்!


மக்களின் வாழ்க்கையை,
உரிமைகளை, ஜனநாயகத்தை காக்க
மே நாளில் போராட்ட உறுதியேற்போம்!


எஸ்.குமாரசாமி

கொரோனா காலத்து ஊரடங்கையடுத்து வருகிற நாட்களில் நாட்டு மக்கள் தற்போதுள்ள நெருக்கடிகளைவிட கூடுதல் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். இந்த நெருக்கடிகளில் இருந்து நாட்டு மக்களைக் காக்க ரூ.20 லட்சம் கோடி வேண்டும். இந்தப் பணம் நம் நாட்டில் இருக்கிறது. இது முடியும்.
நான் வீட்டை நெருங்கிவிட்டேன் அப்பா
வெயில் சுட்டெரிக்கும் நமது கிராமத்தை
தூரத்திலிருந்து பார்க்க முடியும் என நான் நினைக்கிறேன்.
மதிய உணவு இன்னும் சாப்பிடவில்லை என்றால்
எனக்காகக் காத்திருங்கள் அப்பா.
உங்கள் அனைவரோடும் இணைந்து கொள்ள வருகிறேன்.
இப்போது மூன்று நாட்களாக நடந்து கொண்டிருக்கிறேன்.
என்னுடைய தொண்டை வறண்டு விட்டது.
எனக்கு ஒரு கோப்பை குளிர்ந்த நீர் தேவைப்படும்.
நிறைய சோறும்தான், அப்பா
அதோடு கூட்டும் சிவப்பு சட்னியும்
உங்கள் அனைவருக்கும் தேவையான சோறு இருக்கும்தானே அப்பா
அம்மா சமைக்கும் எல்லா பதார்த்தங்களையும்
நான் கனவில் கண்டுகொண்டே இருக்கிறேன்
நான் மிகுந்த பசியில் இருக்கிறேன்,
கடந்த மூன்று நாட்களாக அதிகம் சாப்பிடவில்லை
நீங்கள் ஊரடங்கு பற்றி கேள்விப்பட்டீர்களா அப்பா
பெரிய நோய் வருகிறது
திடீரென்று வேலை இல்லை
வெளியே போ, வேளியே போ என்று அவர்கள் சொன்னார்கள்.
சாப்பிடக்கூட ஒன்றும் இல்லை அப்பா
எனவே நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்
ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல்
அப்பா
என்னுடைய கால்களில் முட்கள் குத்தி ரணமாகியிருக்கிறது.
நாங்கள் சாலைகளையும், காவலர்களையும் தவிர்ப்பதற்காக காடுகளின் வழியே நடந்தோம்
அப்பா
நான் வந்து சேரும்போது, நமது பிரியமான வெள்ளாட்டையும்
என்னுடைய சின்னத்தம்பியையும் ஆரத்தழுவிக் கொள்வேன்.
பிறகுதான் நான் சாப்பிட உட்காருவேன்.
எல்லா உணவும் காலியாகும் வரை
சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன்
நீங்கள் ஆச்சரியத்தில் உங்கள் கண்களை
அகலத் திறந்திருப்பீர்கள்
ஓ, எல்லா சோற்றையும் காலி செய்து விட்டாயா நீ என்பீர்கள்
நீங்கள் என்னுடைய கேசத்தை கோதிவிடுவீர்கள்
நாம் எல்லோரும் சந்தோஷமாக சிரிப்போம்.

(சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, ஜம்லொ மாக்டெம் பிழைப்புக்காக புலம் பெயர்ந்து தெலுங்கானாவில் வயல் வேலைக்கு சென்றிருந்தாள். தன் சொந்த கிராமத்திற்கு நடைபயணமாகச் சென்ற அவர் தனது கிராமத்தில் இருந்து 14 கி.மீ தொலைவு இருக்கும்போது 18.04.2020 அன்று இறந்துவிட்டார்.
தில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.உமாங்குமார் இந்தக் கவிதையை எழுதியுள்ளார். தமிழில் இல.உமாமகேஸ்வரன்)
ஏப்ரல் 14, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தின உறுதிமொழியேற்பு

ஏப்ரல் 14, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை மாவட்ட அளவிலான அணிதிரட்ட லுடன் அனுசரிக்க கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருந்தது.
தோழர் கே.ராஜேஷின் நாட்குறிப்பு

மாநில அமைப்புக் குழு உறுப்பினர்

மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவை, மதத்தின் பெயரால் பிளவுபடுத்த மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி அதன் வெகுஜன அமைப்புகள், 26.02.2020 முதல் CAA NRC NPR வேண்டாம் என தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பட்டினிப் போராட்டம் நடத்தின. பட்டினி போராட்டம் 12 நாட்கள் நடைபெற்றது.
தோழர் ஜேபியின் நாட்குறிப்பு

மாநில அமைப்புக் குழு உறுப்பினர்

2019 டிசம்பர் முதல் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் இல்லாமல்
ஜிம்கானா கிளப்பில் கிளப் வேலைகளுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்ட 38 பேருக்கு மார்ச் 2020 சம்பளம் வழங்கப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மாநில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் ஜேம்ஸ் மேற்கொண்ட முயற்சிகளால் அவர்களுக்கு சம்பளம் கிடைப்பதை நிர்வாகம் உறுதி செய்தது. 16.04.2020 அன்று மார்ச் மாத சம்பளம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
தோழர் ஆர்.மோகனின் நாட்குறிப்பு

மாநில அமைப்புக் குழு உறுப்பினர்

19.03.2020: ஆன்லோட் கியர் தோழர்கள் ஓய்வறையில் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் தோழர் குமாரசாமி பேசும்போது, கொரோனா ஆபத்து பற்றி எடுத்துச் சொல்லி, மக்கள் பாதிப்பு சந்திக்கும் நேரத்தில் மக்களுக்காக நாம் செயல்பட்டாக வேண்டும் என்று முன்னரே வலியுறுத்தினார்.
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க நடவடிக்கைகள்
பற்றிய ஒரு நாட்குறிப்பு


மோ.சங்கர்

மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தும் முன்னரே, ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் 18.03.2020 அன்றே தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக நிவாரணம் ரூ.15000, முகக்கவசம், கை கழுவும் கிருமி நாசினி, வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தது
ஊரடங்கு காலத்தில் செங்கை மாவட்ட எல்டியுசி வேலைகள்

எ.கோபால்

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் களப் பணியில் இறங்கினோம்
ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் செங்குன்றம் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த பத்து குடும்பங்களுக்கு நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் தோழர்கள் தலா 5 கிலோ அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கினர். சங்கத் தலைவர் தோழர் சுரேஷ், சிறப்புத் தலைவர் தோழர் ரஹமத்துல்லா, பொருளாளர் தோழர் மனோசம்பத், துணைத்தலைவர் தோழர் லட்சுமி, துணைச் செயலாளர் தோழர் வசந்தி உள்ளிட்டோர் இந்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் சீனாபுரத்தில், ஏப்ரல் 28 அன்று கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது தொழிற்சங்க மய்ய தோழர்கள், பகுதி மக்கள் நூறு பேருக்கு முகக்கவசங்கள் வழங்கினர். ஏப்ரல் 29 அன்று ஈரோடு நகரத்தில் நூறு பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. அடுத்தடுத்த நாட்களில் பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய மய்யங்களில் 1000 பேர் வரை சந்தித்து முகக்கவசங்கள் வழங்குவதற்கான முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. (29.04.2020)
சாமான்யர்கள் சிலரின்
ஊரடங்கு கால வாழ்க்கை


பசியால முடங்கிட்டோம்....

நான் மோனி கத்தூன். பீகாரிலிருந்து வந்திருக்கிறேன். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் 10 பேருடன் ரூம் எடுத்து தங்கி கட்டுமான வேலைகள் பார்க்கிறேன்.
மக்களை அலைகழிக்கறாங்க...

லட்சுமி. திருவள்ளூர் மாவட்டம் செங்குன் றத்தில் நடைபாதையில் இட்லி கடை நடத்தி வருகிறார். தான் நடத்தி வந்த டிபன் கடை மூடி ஒரு மாதம் ஆகிவிட்டது என்றார்.
செஞ்ச வேலைக்கே கூலி தரல....
நிவாரணம் எங்க வரப் போவுது...?


நான் எஸ்.ஜெய்சாந்தி. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நெற்குன்றம் ஊராட்சில இருக்குறேன்.
குழந்தைக்கு பால் பிஸ்கட் கூட
வாங்க முடியவில்லை


ஓட்டல் தொழிலாளர்களின் நிலை

சந்திரன். நான் சென்னை அகர்வால் பவன் தொழிலாளி. ஊரடங்கு உத்தரவால் எங்களைப் போன்ற தொழிலாளர்களின்  இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது
ஒரு குடும்பத்திற்கு மாதம் 50 கிலோ தரமான அரிசி வேண்டும்

எம்.மோகனா. நான் வண்டலூரில் வசிக்கிறேன். எனது கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். பதினேழு, பதினைந்து வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிவாரண தொகை போதுமா?

கஸ்தூரி. திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம் ஊராட்சியில இருக்குறேன். விவசாய கூலி வேல செய்யறேன். எங்க வீட்ல 5 பேர் இருக்கோம். ஆயிரம் ரூபாயும் ரேஷனும் தந்துட்டா போதுமா?
ஒன்னும் முடியலக்கா...
உயிர் வாழவே பிடிக்கல...


நாமக்கல் மாவட்ட விசைத்தறி கூலித் தொழிலாளர் உரையாடல்

(கொரானாவுக்கு முன்)

அந்த வீட்டு பெண்: அக்கா உங்க வீட்டுல என்ன குழம்பு? எனக்கு கொஞ்சம்...
இந்த வீட்டு பெண்: இந்தாங்கக்கா.
உணவின் அளவு தரம் எல்லாம் குறைந்துவிட்டது

குச்சிப் பை தைக்கும் தொழிலாளியின் துயரம்

ஓ.சிவகாமி. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவைச் சேர்ந்தவர்.
ஊரடங்கு உத்தரவுக்கு முன் வாரம் ரூ.1,500, மாதம் ரூ.6,000 வரை சம்பாதித்து வந்தேன். தற்போது ஒரு மாத காலமாக இந்த வருவாய் இழந்துள்ளேன்.

Sunday, April 5, 2020

தலையங்கம்
ஏப்ரல் 3, 2020

திசைதிருப்பும் முயற்சிகள் நிறுத்தப்பட்டு 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்

நிலவுகிற இக்கட்டான நாட்களில் கூட பிரதமர் மோடி ஊடகங்களைச் சந்திப்பதில்லை. கைதட்டு, விளக்கு ஏற்று என்று சிரிப்பு பிரதமர் ஆகிவிட்டார்.
கொள்ளை நோய்களும் கொரோனாவும்
பாதிப்பும் அணுகுமுறையும்


எஸ்.குமாரசாமி
ஏப்ரல் 3, 2020 மதியம் 3 மணி


கொரோனா உயிரிழப்பு விவரங்கள்
அய்க்கிய அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் 02.04.2020 வரையிலான கொரோனா உயிரிழப்பு கணக்கு ஒன்று தந்தது. அதன்படி 181 நாடுகளில் 9,81,221 பேர் நோய் தொற்றுக்குள்ளாகி, 2,08,630 பேர் மீண்டுள்ளனர். 50,230க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
பிரிக்கால் தொழிலாளர்கள்
நடத்துகிற வழக்குகள் பற்றிய சில குறிப்புகள்


எஸ்.குமாரசாமி

எழுச்சியுற்ற பிரிக்கால் தொழிலாளர் போராட்ட அலை கோவை எங்கும் பரவாமல் தடுக்க, அரசும் மூலதனமும், கொலை வழக்கு, கொலைச் சதி வழக்கு வரை செல்வார்கள் என்பதை, 2009ல் நாடு கண்டது.
அய்க்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு நிறுவன தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள்

எஸ்.குமாரசாமி 


சான்மினா எஸ்சிஅய், 4 கண்டங்களில் 25 நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனம். ஆண்டு வருவாய் ரூ.50,000 கோடி தாண்டும்.
ஒரு கப்பல் சொல்லும் கதை

ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை

டைட்டானிக் கப்பல் பேரழிவில் முடிந்தது போல அந்தக் கப்பலுக்கும் நேர்ந்திருக்கக் கூடும். கியூபா உதவிக் கரம் நீட்டவில்லை என்றால்.
கொரோனா காலத்து எல்டியுசி ஹெல்ப்லைன்

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்தவுடனேயே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கம்யூனிஸ்ட் கட்சி, எல்டியுசி, மக்களுக்கான இளைஞர்கள் மற்றும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க தோழர்கள் உதவி எண்களை அறிவித்தனர்.
கொரோனா நெருக்கடியும் முதலாளித்துவமும்

ஆர்.வித்யாசாகர்

உலகில் பெரும்பான்மையான நாடுகளில் முதலாளித்துவ எந்திரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அய்ரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா பாதிப்புகள்

உமாமகேஸ்வரன்


அய்ரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா கொத்துக் கொத்தாக மனிதர்களை கொன்று குவிக்கிறது. முன்னாள் ஏகாதிபத்திய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கின்றன.
என்ன செய்ய வேண்டும்?

நூல் வாசிப்பு கூட்டம்

கம்யூனிஸ்ட் கட்சி துவங்கிய அக்டோபர் 11, 2019 முதல், எழுக தமிழ் பேரணி தொடங்கி, சிஎஎ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான காலவரையற்ற பட்டினிப் போராட்டம் வரை, பல்வேறு தொடர் போராட்டங்கள், தலையீடுகள் என விடாப்பிடியான கடமைகள் முழுமையாக நேரத்தை எடுத்துக் கொண்டன.
மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க
தமிழக அரசு சிறப்பு சட்டமன்றம் கூட்ட வேண்டும்


கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்

மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கூட்டக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு மாத கால பிரச்சார இயக்கத்தை துவங்கியது. மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை நடத்தப்படவுள்ள இந்த பிரச்சார இயக்கம் மே 1 அன்று சட்டமன்றம் அருகில் பெருந்திரள் கூட்டத்தில் நிறைவுறும்.

Saturday, March 21, 2020

ரஞ்சன் கோகோய் வாழ்த்தி வரவேற்கப்படுவார்

எஸ்.குமாரசாமி


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார். அரசாட்சித் துறைக்கும் நீதித்துறைக்கும் ஒத்திசைவை மேம்படுத்த தனது புதிய பதவி உதவும் என்று அவர் சொல்கிறார்.

Saturday, March 7, 2020

செபாஸ்டியன் அன்ட் சன்ஸ்: மிருதங்கம் செய்வோரின்
ஒரு சுருக்கமான வரலாறு - டி.எம்.கிருஷ்ணா


நூல் அறிமுகம்

ஆர்.வித்யாசாகர்


சாதிவெறிக்கு, மதவெறிக்கு எதிராக, சுற்றுப்புற சூழல், சமூக வழமைகளில் மாற்றங்களை கோருதல், சிறுபான்மையினர் ஆதரவு என சமூக, அரசியல் தளத்தில் உரத்த குரல் எழுப்பி வருகிற, இசையில் சாதீய தடைகளை உடைத்ததற்காக 2016ல் ரேமன் மக்சேசே விருது பெற்ற டி.எம்.கிரு~;ணா எழுதியுள்ள ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ மனு தர்மத்தை கேள்விக்குள்ளாக்குகிறது
தலையங்கம்

ஊழல் அடிமை பழனிச்சாமி அரசின்
2021 கனவு நிறைவேறாது


2021ல் ஆட்சியைப் பிடித்துவிட அஇஅதிமுக பெரும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.
NO CAA - NRC - NPR

தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

பத்து நாட்களைக் கடந்து
காலவரையற்ற பட்டினிப் போராட்டம்


குடியுரிமை சட்டத் திருத்தம் வேண்டாம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம், தேசிய மக்கள் தொகை பதிவேடு வேண்டாம் என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எல்டியுசி நடத்தும் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் பத்து நாட்களைக் கடந்துவிட்டது.
தலைநகர் டில்லியில் சங்பரிவார் கூட்டம் நடத்தியுள்ள
மதவெறி வன்முறையும் ஆபத்தான புதிய சகஜ நிலையும்


எஸ்.குமாரசாமி

2002 குஜராத் பாணியில் 2020ல் டில்லியில் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் காவி கும்பல், காக்கிச் சட்டைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அல்லது காக்கிச் சட்டைகள் ஆதரவோடு, அல்லது காக்கிச் சட்டைகள் பங்கேற்போடு, இசுலாமிய வேட்டை நடத்தியதை ஊரறியும். உலகறியும்.
நீதித்துறையும் ஆட்சி அதிகாரத்துறையும்
ஒன்றுகலப்பது நாட்டுக்கு நல்லதல்ல


எஸ்.குமாரசாமி

அனைத்து நாடுகளின் நீதிபதிகள் சமீபத்தில் டெல்லியில் கூடியபோது, இந்திய ஒன்றிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, உச்சநீதிமன்றத்தின் மூன்றாம் நிலையில் உள்ள நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி பற்றி ஒரு பார்வை

சூழல் புதிது. தலைமுறை புதிது.
தேவைகள் புதிது. எதிர்ப்பார்ப்புகள் புதிது.


காஞ்சிபுரம் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சியில் தோழர்கள் வித்யாசாகர், மஞ்சுளா உள்ளிட்டோர் பிப்ரவரி 16, 17 தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சியில் பண்ருட்டி மற்றும் கண்டிகை கிராமங்கள் உள்ளன.
மோடி அரசின் தீய நோக்கத்தில் இருந்து எல்அய்சியைக் காப்போம்

உமாமகேஸ்வரன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பித்த நிதிநிலை அறிக்கை (2020 - 2021)ல் எல்அய்சி என்று அழைக்கப்படுகின்ற இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் அரசின் முடிவை அறிவித்தார்.
நோ சிஏஎ - என்ஆர்சி - என்பிஆர் 
பிப்ரவரி 2 - 8 பிரச்சார இயக்கத்தில்  கம்யூனிஸ்ட் கட்சி...


தொகுப்பு: சேகர்

சிஎஎ - என்ஆர்சி - என்பிஆர் வேண்டாம் என பிப்ரவரி 2 அன்று அனைத்து எதிர்கட்சிகள் துவங்கிய எதிர்ப்பு இயக்கத்தை வரவேற்றதோடு, கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முழக்கத்தின் மீது மக்கள் சந்திப்பு இயக்கம் துவங்கியது.
காவி தர்பார் வேண்டாம்!
சிஎஎ வேண்டாம்! என்ஆர்சி வேண்டாம்! என்பிஆர் வேண்டாம்!
ஜனநாயகம் வேண்டும்! சமூக நீதி வேண்டும்!


மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் கருத்தரங்கம்
காவி தர்பார் வேண்டாம், சிஎஎ வேண்டாம், என்ஆர்சி வேண்டாம், என்பிஆர் வேண்டாம், ஜனநாயகம் வேண்டும், சமூக நீதி வேண்டும் என்ற முழக்கங்களுடன் மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் கருத்தரங்கம் பிப்ரவரி 9 அன்று செங்குன்றத்தில் நடைபெற்றது.
சிறுகடை நடைபாதை வியாபார அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின்
23ஆம் ஆண்டு சிறப்பு மாநாடு


திருவள்ளூர் மாவட்ட சிறுகடை நடைபாதை வியாபார அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் 23ஆம் ஆண்டு சிறப்பு மாநாடு பிப்ரவரி 25 அன்று செங்குன்றத்தில் நடத்தப்பட்டது.

Friday, January 31, 2020

மக்களுக்கான இளைஞர்கள் கிளை திறப்பு

மக்களுக்கான இளைஞர்கள் கிளை திறப்பு நிகழ்ச்சி 12.01.2020 அன்று காலை 11 மணியளவில் கீரப்பாக்கம் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது.
டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் எழுச்சிமிக்க போராட்டம்

தமிழ்நாடு அரசாங்கத்தின் நலத்திட்டங்களை எல்லாம் செயல்படுத்த டாஸ்மாக் வருவாயே அடிப்படையாக உள்ளது.
ஜனவரி 16 அன்று அம்பத்தூர் எஸ்வி நகர் பகுதியில் எல்டியுசியில் இணைக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் கிளை திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் தோழர் கு.பாரதி, மாநிலப் பொருளாளர் தோழர் மோகன் மற்றும் பகுதி முன்னணி தோழர்கள்
வேணுகோபால், பசுபதி, பாலகிருஷ்ணன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர்கள் கே.சுரேஷ், புகழ்வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காவி தர்பார் வேண்டாம்! சமூக நீதி வேண்டும்!   

பிப்ரவரி 2 - 8 எதிர்ப்பியக்கம்
காவி தர்பார் கனவுகளுடன் சமூக நீதிக்கு, பெரியாருக்கு குறி வைக்கிறார்கள்

எஸ்.குமாரசாமி

காவிக் கூட்டத்துக்கு தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்ற பேராசை உள்ளது. கூட்டாளிகளின் ஆட்சி என்பதோடு அது திருப்தி அடைய மறுக்கிறது.
குடியரசை குடிமக்களே காக்க வேண்டும்

எஸ்.குமாரசாமி

குடி அரசு என்பதே குடிமக்களுடையதுதானே? அப்படியானால், குடி அரசைக் குடி மக்களே காக்க வேண்டும் என்று சொல்லும்போது, குடி அரசை நாடாளும் சட்டமியற்றும் துறை அரசதிகாரம் செலுத்தும் துறை நீதித் துறை ஆகியவை காக்காது என்று சொல்கிறோமா?
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

உமாமகேஸ்வரன்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் எட்டு வருடங்களுக்குப் பிறகு 2019 டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற் றது.
வெளிப்படைத்தன்மைக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் எந்தத் தொடர்பும்
கிடையாதா?


எஸ்.குமாரசாமி


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் காலத்தின் ‘மூடிய உரை’ நீதிபரி பாலன முறை, நீதித்துறையின் வெளிப்படைத் தன்மைக்கு எதிரானது.
காஷ்மீரில் இணைய சேவை முடக்கம் மற்றும் 144 தடை உத்தரவு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு
மிகவும் தாமதமானது. உடனடி பலன் தராதது
(Too Little.Too Late)


எஸ்.குமாரசாமி

இந்தியா ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரிந்து போகும் உரிமை தந்து ஜம்மு காஷ்மீரை தன்னோடு இணைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
கொதிக்கும் எண்ணெய்க்கும் எரியும் நெருப்புக்கும் இடையே
சிக்கித் தவிக்கும் தமிழக கிராமப்புற ஏழை மக்கள்


ஆர்.வித்யாசாகர்

பொதுவாக கிராமப்புற பிரச்சனைகள் என்று பொது வெளியில் விவாதிக்கப்படுவது பெரும்பாலும் விவசாயம்ää விவசாயிகள்ää கட்டுப்படியாகும் விலைää கடன் போன்ற பிரச்சனைகளை மட்டும்தான்.
மதர்சனில் போராட்டம் முடிந்துவிட்டது
ஆனாலும் போராட்டம் தொடர்கிறது


குறைந்த கூலி பெற்று வந்த, கவுரவம் மறுக்கப்பட்ட திருபெரும்புதூர் மதர்சன் தொழிலாளர்கள் 26.08.2019 அன்று துவங்கிய வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு 13.01.2020 முதல் வேலைக்கு திரும்பி விட்டார்கள்.
ஜனவரி 8 வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஜம்போ பேக் லிமிடெட் தொழிலாளர்கள்


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜம்போ பேக் லிமிடெட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஜனவரி 8 வேலை நிறுத்தத்துக்கான அறிவிப்பை 20 நாட்களுக்கு முன்பே நிர்வாகத்திற்கு முன்வைத்தார்கள்.
நாரவாரிகுப்பம் பேரூராட்சியின்
உள்ளாட்சித் துறை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு
வீட்டுமனைப் பட்டா பெற எடுக்கப்படும் முன்முயற்சிகள்


க.ராமன்

செங்குன்றம், நாரவாரிகுப்பம் பேரூராட்சியின் உள்ளாட்சித் துறை துப்புரவுத் தொழிலாளர்கள் 12 பேரின் குடும்பங்கள் செங்குன்றத்தில் உள்ள சுடுகாட்டுக்கு எதிரில் உள்ள துரைசாமி தெருவில் காலியாக உள்ள 33 சென்ட்டில் குடியிருந்து வருகின்றனர்.
2020 ஜனவரி 8 பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் 
இடது தொழிற்சங்க மய்யம் (எல்டியுசி)

எஸ்.சேகர்

2020 ஜனவரி 8 பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் சென்னை, திருபெரும்புதூர், செங்குன்றம், கோவை, பள்ளிபாளையம், சேலம் ஆகிய மய்யங்களில் நடந்த சாலை மறியல் போராட்டங்களில் எல்டியுசி தோழர்கள் கலந்துகொண்டனர்.

Wednesday, January 8, 2020

தலையங்கம்

கம்யூனிஸ்ட்

2019 அக்டோபரில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி, ரஷ்யப் புரட்சி நாளை ஒட்டி நவம்பரில்
இந்து ராஷ்டிரா வேண்டாம்! கார்ப்பரேட் ராஜ்ஜியம் வேண்டாம்!
ஜனநாயகம் வேண்டும்! சட்டத்தின் ஆட்சி வேண்டும்!
ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்!


எஸ்.குமாரசாமி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு இரண்டு பெரிய உரிமைகளை வழங்கியுள்ளது. குடிமக்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு வாக்கு என்றது. சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் என்றது.
புத்தக அறிமுகம்

அராஜகம்


கிழக்கிந்திய கம்பெனி 


கார்ப்பரேட் வன்முறை மற்றும் ஒரு பேரரசின் பெருங்கொள்ளை


உமாமகேஸ்வரன்

நமது நாடு வெள்ளையரால் அடிமைப்படுத்தப்பட்டது என்றும் வியாபாரம் செய்ய வந்தவர்கள் - கிழக்கிந்திய கம்பெனி - நமது நாட்டைப் பிடித்து விட்டார்கள் என்றும் இந்தியர் அனைவருக்கும் வரலாற்றுப் பாடத்தில் சொல்லித் தந்திருக்கிறார்கள்


கடவுள்.... சாதி.... நிலம்....


உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்படும் பஞ்சமி, கோவில் நில உரிமைகள்


ஆர்.வித்யாசாகர்

காலமெல்லாம் நிலத்தில் பாடுபடும் கிராமப்புற உழைக்கும் மக்களுக்குää அவர்களுக்கு கவுரவத்தைää சமூக அந்தஸ்தை அளிக்கிற  நிலம் இல்லை.
மக்கள் சார்பு அரசியலை முன்நிறுத்திய
ஜெரிமி கோர்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி
பிரிட்டனில் ஏன் வெற்றி பெற முடியவில்லை?


எஸ்.குமாரசாமி

பிரிட்டனில் டிசம்பர் 12, 2019 அன்று தேர்தல் நடந்தது. பிரிட்டன் மக்கள் தொகை 6.6 கோடி. 4.75 கோடி பேர் தகுதி வாய்ந்த வாக்காளர்கள்.
உள்ளாட்சித் தேர்தல் போராட்டத்தில்
கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்


50%க்கு மேல் நகர்மயமாக்கம் நடந்துள்ள தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் கார்ப்பரேட் நலன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சிகளில் மற்றும் 9 மாவட்டங்களில் வாக்காளர் தொகுதியை அறிவிக்காமல் தேர்தல் நடத்த முடியாது என்ற நிலையில்
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

உமாமகேஸ்வரன்

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் 2019, 5 கட்டங்களாக நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டடுள்ளன.
நாங்கள் இந்த நாட்டு குடிமக்கள்தானா
என்று கேட்கவோ முடிவு செய்யவோ நீ யார்?



REJECT CAA - NRC – NPR


குடியுரிமை திருத்தச் சட்டம், டிசம்பர் 9 அன்று மக்களவையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 12 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுவிட்டது. நாடு பற்றி எரிகிறது.
ஆயிரமாண்டுகளின் அன்பு

மனுஷ்ய புத்திரன்

அடையாளங்கள் அல்ல
அடையாளங்களின் அரசியலே முக்கியம்

Search